Last Updated : 24 Aug, 2018 09:34 AM

 

Published : 24 Aug 2018 09:34 AM
Last Updated : 24 Aug 2018 09:34 AM

பிஹார்  காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில்விசாரணை அதிகாரி மாற்றப்பட்டது ஏன்? - சிபிஐ.க்கு பாட்னா உயர் நீதிமன்றம் கேள்வி

பிஹார் பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டது ஏன் என்று சிபிஐயிடம் பாட்னா உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமி

கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்

சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை, பிஹார் அரசின் வேண்டுகோளின் பேரில் பாட்னா உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அந்த வகையில், வழக்கின் தற்போதைய விசாரணை அறிக்கையை ஆக.21-ம் தேதி

தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு, இந்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய அதிகாரியை சிபிஐ இயக்குநரகம் திடீரென இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முகேஷ் ஷா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, நிலவர அறிக்கை

தாக்கல் செய்யப்படாததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ

எஸ்.பி. மிஸ்ரா திடீரென மாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து, வழக்கின் மறு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினத்தில் விசாரணை நிலவர அறிக்கையையும், சிபிஐ எஸ்.பி. மாற்றப்பட்டதற்கான காரணத்தையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x