Last Updated : 20 Aug, 2018 03:35 PM

 

Published : 20 Aug 2018 03:35 PM
Last Updated : 20 Aug 2018 03:35 PM

மணலையும் ஜல்லியையும் சுமந்த டிப்பர் லாரிகள் கேரளாவில் தற்போது மக்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறது

கிரானைட் கற்களையும் மணலையும் சுமந்து சென்ற லாரிகள் தற்போது நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை கொண்டுசெல்லும் லாரிகளாக மாறி வலம் வருகின்றன.

டிப்பர் லாரிகளைப் பொறுத்தவரை மக்களுக்கு ஒருவிதமான வெறுப்பு உண்டு. இயற்கை வளங்களை சுரண்டுவதற்காகவே அவற்றை குவாரி முதலாளிகளும் லாரி முதலாளிகளும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்த லாரிகளில்தான் கொண்டு செல்லப்பட்டன.

டிப்பர் லாரிகள் மீதிருந்த வெறுப்புப் பார்வை முற்றிலுமாக விலகி தற்போது அவற்றின்மீது ஒரு சினேக பார்வை உருவாகியுள்ளது. காரணம் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ளத்தில் அவதியுறும் மக்களுக்கும் நிவாரண பொருட்களையும் அவர்களை மீட்கும் பணியிலும் நம்பிக்கையை சுமந்தபடி தற்போது கேரளாவை வலம் வந்துகொண்டிருக்கின்றன இந்த லாரிகள்.

இதில் அதிகப்பட்சமாக 800 லாரிகள் ஒரே ஒரு கம்பெனியுடையது என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவிக்கையில், இந்த கனரக வாகனங்கள் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலாக மாவட்ட அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒரு டிப்பர் லாரி ஓட்டுநர் கூறுகையில், "கடந்த சில நாட்களில் நான் உறங்கிய நேரம் என்றால் அது மிகவும் குறைவுதான் ... வெள்ளம் கரைபுரண்டோடும் பகுதிகளில் இருந்து மக்களைக் கொண்டு செல்வதற்காக நேரம்காலமின்றி நான் லாரி ஓட்டிய பணி மனநிறைவை தந்துள்ளது," என்றார்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை சேவைக்காக தனது 12 லாரிகளை அனுப்பிவைத்ததாக ஒரு லாரி உரிமையாளர் தெரிவித்தார்.

"இந்த லாரிகளுக்கு நன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிய அளவிலேனும் என்னால் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் அந்த உரிமையாளர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x