Published : 18 Aug 2018 08:17 PM
Last Updated : 18 Aug 2018 08:17 PM

2018 கேரள வெள்ளம்: நீங்களும் உதவ வேண்டுமா? வழிமுறைகள் இதோ

இடைவிடாத மழை, பெருவெள்ளம் கேரளாவை ஆட்டிப்படைத்து வருகிறது. பலர் வெள்ள நீர் சூழ அகப்பட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் தொகையில் அனைத்துப் பிரிவினரும் தங்களால் இயன்ற உதவிகளை அளித்து வருகின்றனர்.

இதோ நீங்களும் பங்களிக்க விரும்பினால் அதற்கான வழிமுறை:

முதலமைச்சர் நிவாரண நிதி:

நேரடியாக வங்கியிலிருந்து பணம் மாற்றும் முறை இது. UPI மூலமாகவும் பணம் அனுப்பலாம்

கணக்கு விபரங்கள்

:பெயர்: Chief Minister's Distress Relief Fund

கணக்கு எண்: 67319948232

வங்கி: State Bank of India

IFSC: SBIN0070028

SWIFT code: SBININBBT08

அரசாங்க கட்டுப்பாட்டு அறைகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் நிவாரணப் பொருட்களைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம்.

திருவனந்தபுரம்: The Principal Secretary (Finance) Treasurer, Chief Minister's Distress Relief Fund, Secretariat, Thiruvananthapuram - 1

கண்ணூர்: Control Room, Collectorate, Kannur - 670002 (9446682300, 04972700645)

இடுக்கி: District Collector Idukki, Idukki Collectorate, Painavu P O, Kuyilimala, Idukki - 685603

வயநாடு: Wayanad: District Collector, Collectorate, Kalpetta, Wayanad (0469 204151, 9745166864, 9746239313)

தி இந்து சேகரிப்பு மையங்கள்

தி இந்து குழுமம் சார்பிலும் நிவாரணத்துக்கான நிதி வாசகர்களிடமிருந்து திரட்டப்படுகிறது. சேகரிக்கப்படும் பணம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்படும்.க்ராஸ் செய்யப்பட்ட காசோலை அல்லது வரைவோலையாக (demand draft), ‘The Hindu Relief Fund’ என்று பெயரில் பணத்தை அனுப்பலாம்.

அதுனுடன் நிதி தருபவர் பெயர், முகவரி, (இருந்தால்) பான் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்புங்கள். ரசீது அனுப்பிவைக்கப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, ‘The Hindu Relief Fund’, Kasturi Buildings, 859-860 Anna Salai, Chennai 600002.

நேரடி வங்கிப் பணம் மாற்றுக்கான விவரங்கள்

‘The Hindu Relief Fund’ என்ற பெயரில், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அண்ணாசாலை கிளை, 826, தாராபூர் டவர்ஸ், IFSC: CBIN0280879.

Current Account No. 3453685237.

நேரடியாக வங்கிக்குப் பணம் அனுப்புபவர்கள், உங்கள் பெயர் மற்றும் முகவரியை, அதோடு நீங்கள் பணம் மாற்றியதற்கான UTR எண்ணுடன், helpkerala@thehindu.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஒரு ரசீது மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.

நிவாரணப் பொருட்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.

பச்சை அரிசி, வேகவைத்த அரிசி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, பால் பவுடர், தண்ணீர் ஃபில்டர், குழந்தைகள் உணவு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வாசகர்கள் அனுப்பலாம்.

நீங்கள் தர வேண்டிய முகவரிகள்:- APL Global School, 697/3, Anand Nagar Main Road, MCN Nagar, Okkiyam, Thoraipakkam.

- Shri Natesan Vidyasala Matriculation Higher Secondary School, Mudichur Road, Mannivakkam.

- Bhavan’s Rajaji Vidyashram, 6, Kilpauk Garden Road, Davidpuram, Kilpauk.

அமேசன் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்கள்

அமேசன் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களும், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.

அவர்கள் செயலி அல்லது இணையதளத்துக்குச் சென்றால் நிவாரணத்துக்கான லின்க் முதல் பக்கத்திலேயே இருக்கும்.

அமேசானில், Goonj, Habitat for Humanity மற்றும் WorldVision ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல்கள் இருக்கும்.

அதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து, அடுத்து வரும் லின்கில் இருந்து பொருட்களை தேர்வு செய்து அனுப்பிவைக்கலாம். அந்த பொருட்கள் தேர்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

ஃபிளிப்கார்ட் செயலியில் Goonj தொண்டு நிறுவனத்துக்கு நிதி அனுப்புவதற்கான வழிமுறைகள் உள்ளன.

பேடிஎம் தளம்

பேடிஎம் தளம், பயனர்கள் அனுப்பும் பணத்தை இரட்டிப்பாக்கி அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. ஒரு பயனர் ரூ.200 அனுப்பினால், பேடிஎம் மேலும் ரூ.200 சேர்த்து ரூ.400ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிவிடும்.

பேடிஎம் செயலிக்குச் சென்றால் நிவாரணத்துக்கான லின்க் முதல் பக்கத்திலேயே இருக்கும்.

கூகுள் நிறுவனம்

கூகுள், இதில் முகாம்கள், நிவாரண நடவடிக்கைகள், உணவு, தண்ணீர் கிடைக்குமிடம், ஜீப் இருக்குமிடம், நிவாரணப் பொருட்களை சேர்க்கும் இடம், தன்னார்வலர்கள் இருக்கும் இடம், மருந்துகள், தேவையான பொருட்கள் கிடைக்குமிடம் என அனைத்தையும் குறிப்பிட்டு கேரளாவின் வரைபடம் ஒன்றை அமைத்துள்ளது.

நீங்கள் யாரையாவது தேடுகிறீர்கள் அல்லது தொலைந்தவர்களைப் பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் கூகுள் பெர்சன் ஃபைண்டர் என்ற சேவையின் மூலம் அதை தெரிவிக்கலாம்.

மாநில அரசின் மீட்பு தளம்

keralarescue.in என்ற இணையதளத்தில், உதவி கோருபவர்கள், உதவி செய்ய விரும்புபவர்கள், தன்னார்வலராக பதிவு செய்ய விரும்புபவர்கள், நிவாரண முயற்சிகளுக்கான தொடர்புகளைத் தேடுபவர்கள், நிவாரண முகாம்கள் இருக்குமிடம் என அனைத்துக்குமான விவரங்கள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x