Published : 18 Aug 2018 07:15 PM
Last Updated : 18 Aug 2018 07:15 PM

கேரள துயரத்தைச் சாதகமாக்கி பணம் குவிக்க முயன்ற திருச்சி நபர்: நன்கொடைக்கு தன் வங்கிக் கணக்கை அளித்து பித்தலாட்டம்

 கேரள மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு பல மாவட்டங்களிலும் நிவாரண உதவி கேட்டு பலரும் அனுப்பி வரும் நிலையில் திருச்சியைச் சேர்ந்த விஜய்குமார் என்ற நபர் #KeralaFloods2018#PrayforKerala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இதற்கு நிதியுதவி கோரி தன் சொந்த வங்கிக் கணக்கைக் கொடுத்து பித்தலாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய்குமார் என்ற நபர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட போலி அறிவிப்பில் “கேரளா மக்களே கவலைப்பட வேண்டாம். எம்மக்களுக்கு உதவிய உங்களை நாங்க மறக்க மாட்டோம். தமிழர்களே தயாரா..! எல்லோரும் உதவுவோம் வாருங்கள்.. அவசியம் பகிருங்கள்” என்று கூறி வங்கி விவரம் என்று தன் சொந்த வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்துப் பித்தலாட்டம் செய்துள்ளார்.

இதனையடுத்து கேரள போலீஸார் விஜய்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். திருவனந்தபுரம் சரகம் தலைமை ஆய்வாளர் மனோஜ் ஆப்ரகாம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க பாரத ஸ்டேட் வங்கி இவரது கணக்கை முடக்கியுள்ளது. திருவனந்தபுரம் நகரக் கிளையில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, வங்கிக் கணக்கு சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x