Last Updated : 18 Aug, 2018 04:53 PM

 

Published : 18 Aug 2018 04:53 PM
Last Updated : 18 Aug 2018 04:53 PM

ஆதார் புள்ளிவிவரங்களை அரசாங்கத்தைத் தவிர வெளியாட்கள் பயன்படுத்தினால் கடும் அபராதம்: ஸ்னோடென் யோசனை

குடிமக்களின் ஆதார் புள்ளிவிவரங்களை யார் தவறாகப் பயன்படுத்தினாலும் அரசாங்கம் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.

ஆதார் தரவுகளை அரசுப் பணிகளுக்கு அல்லாமல் வெளியாள் பயன்படுத்தும்பட்சத்தில் அரசு அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என எட்வர்ட் ஸ்னோடென் இன்று தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் நேற்று மாலை டாக் ஜர்னலிசத்தின் ஐந்தாவது பதிப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு ஸ்னோடென் தெரிவித்ததாவது:

''அரசு உபயோகங்களுக்கு ஆதார் தரவுகளைப் பயன்படுத்துவதில் உண்மையிலேயே அரசு தீவிரமாக இருந்தால் நல்லது. ஆனால் யாராவது அந்தத் தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

சமூகத்தின் அமைப்பு முறையானது, யூனிக் ஐடெண்டிபிகேஷன் அத்தாரிடிஆப் இந்தியா (UIDAI) திட்டத்திற்குள் அடங்காத ஒன்றாக இருக்கிறது.

 “உனக்கென்று உரிமைகள் இல்லை'' என்று எந்த அரசாங்கமும் சொல்லமுடியாது. இப்படி சொல்வதற்கு மாறாக, ஒரு புதிய திட்டத்தைக்கொண்டுவந்து மக்கள் உரிமைகளையும் அவர்களையும் பாதுகாக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

இளைஞர்களுக்கு தனியுரிமை பற்றி அக்கறை இல்லை என்றுசொல்வது ஒரு மாயைதான். உண்மையில் இளைஞர்கள் தங்கள் தனியுரிமைப் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

குடிமக்கள் தங்களுக்கு ஏன் தனியுரிமை தேவை என்று அரசாங்கத்திற்கு விளக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதேநேரம் ஒரு அரசாங்கமானது தனது மக்களுக்கு உரிமைகள் ஏன் தேவையில்லை என்பதை விளக்க கடமைப்பட்டிருக்கிறது.

அரசாங்கமற்ற வெளியாள்கள் விதிகளை மீறி தகவல்களைப் பெறும்போது தனிப்பட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நமக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ரகசிய குறியாக்க முறைகளாலும் வலுவான சட்ட அமைப்புமூலமே தனியுரிமையை பாதுகாக்க முடியும்.''

இவ்வாறு ஸ்னோடென் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x