Last Updated : 18 Aug, 2018 02:31 PM

 

Published : 18 Aug 2018 02:31 PM
Last Updated : 18 Aug 2018 02:31 PM

கேரளா விரைந்தது ஒடிசாவின் தீயணைப்பு மீட்புக்குழு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக தீயணைப்புத் துறையைச் சார்ந்த 240 உறுப்பினர்களைக் கொண்ட மீட்புக் குழுக்களை ஒடிசா அரசு சனிக்கிழமை அனுப்பியது.

ஒடிசாவின் பிஜூ பட்நாயக் சர்வதேச விமானநிலையத்திலிருந்து மீட்புக் குழுக்கள் அடங்கிய 75 விசைப்படகுகளை இந்திய விமானப் படையின் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்புக் குழுவை தீயணைப்புத் துறை தலைவர் பி.கே.ஷர்மா கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒடிசா அரசு தீயணைப்புப் படை வீரர்களை கேரளாவுக்கு மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று ஷர்மா தெரிவத்தார்.

"இது நிச்சயமாக ஒடிசா தீயணைப்புத் துறையின் பெருமைக்குரிய ஒரு விஷயம். முன்னதாக, ஆந்திராவில் ஏற்பட்ட ஹூதூத் புயலின்போது மிகப்பெரிய பணிகளைச் செய்துள்ளனர். கேரளா சென்றுள்ள மீட்புப் படை வீரர்கள் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடியர்வகள். எங்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று அவர் கூறினார்.

முதல்வர் நவீன் பட்நாயக் கேரள வெள்ள நிவாரணத்திற்கான நிதிஉதவியாக ஏற்கெனவே ரூ.5 கோடியை அறிவித்துள்ளார்.

ஒடிசா அரசு இதற்காக சிறப்பு நிவாரண ஆணையாளர் அலுவலகத்தில் 24 மணி நேர ஹெல்ப்லைன் (1070 மற்றும் 0674-2534177 ) அமைத்துள்ளது.

கேரளவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் ஒடிசாவைச் சேர்ந்த 130 பேர் சிக்கியுள்ளனர். தற்போது அவர்கள் ஓடப்பள்ளியில் உள்ள, அலுவா மூணார் சாலையில் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கேரளாவில் 2 ஆயிரம் நிவாரண முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதால் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் இன்று காலை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x