Last Updated : 18 Aug, 2018 09:23 AM

 

Published : 18 Aug 2018 09:23 AM
Last Updated : 18 Aug 2018 09:23 AM

காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: பிஹார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா வீட்டில் சிபிஐ சோதனை

பிஹாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக் கில் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் சேவா சங்கல்ப் இவாம் விகாஷ் சமிதி என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று சிறுமிகள் காப்பகத்தை நடத்தி வந்தது. அங்குள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கப்பட்ட தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கில் அந்த காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாக்குர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முசாபர்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ரவிகுமார் ரவுஷனும் ஒருவர் ஆவார்.

இந்த நிலையில் பிஹார் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் அடிக்கடி அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைக்குச் சென்று வருவர் என்று ரவிகுமாரின் மனைவி ஷிவக்குமாரி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து மஞ்சு வர்மா பதவி விலகவேண்டும் என்று பிஹாரில் பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் மஞ்சு வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை பிஹார் அரசு அமைத்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்த காரணத்தால் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பிஹார் அமைச்சர் மஞ்சு வர்மாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீடு, அலுவலகங்கள் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அவரது வீடு, அலு வலகங்கள் உள்ள மோட்டிஹரி, பாகல்பூர், பாட்னா உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர். அதுபோலவே பிரஜேஷ் தாக்குருக்குச் சொந்தமான 7 இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.

சிறுமிகள் காப்பகத்திலுள்ள 34 சிறுமிகள் பாலியல் பலாத் காரத்துக்கு ஆளாகியுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x