Published : 18 Aug 2018 09:14 AM
Last Updated : 18 Aug 2018 09:14 AM

நிவாரண முகாம்களில் 2 லட்சம் பேர் தங்கவைப்பு: மழை, வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 324-ஆக உயர்வு; மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரம்

கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளா, இன்று மிகப்பெரிய பேரிடரை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது.

இயற்கைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் முதன்மையானது கேரளா. இங்குள்ள மலைகளை, குவாரி உள்ளிட்ட பிற பயன்பாட் டுக்கு பயன்படுத்தவும், நீர்நிலை களில் வணிகரீதியாக தாமரை உள்ளிட்டவற்றை வளர்க்கவும் கூட அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கும் பல பகுதிகளிலும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

வனத்தையும், சூழலையும் இவ் வளவு முக்கியத்துவம் கொடுத்து காக்கும் கேரளம் தற்போது தத்தளித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, கன மழை காரணமாக கேரளா மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக் கும் 58 அணைகளும், கேரள நீர் ஆதாரத்துறையின் கீழ் இருக் கும் 22 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.

இடுக்கி அணையில் இருந்து ஒரு விநாடிக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை கடந்த மூன்று தினங்களாக வெளி யேற்றப்படுகிறது. பத்தனம் திட்டா மாவட்டத்தை நேற்று முன்தினம் உலுக்கிய கனமழை, நேற்று ஆலுவா, சாலக்குடி பகுதி களை புரட்டிப் போட்டது. இன்னும் அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கேரளாவுக்கு பருவம் தவறா மல் கிடைக்கும் தென்மேற்கு பருவ மழையின் கால அளவு 4 மாதங்கள். அப்போது பெய்யும் மொத்த மழையை விட, கடந்த ஜூனில் இருந்து இதுவரை இரண்டரை மாதங்களில் மட்டும் 37 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இடுக்கி, எர்ணாக்குளம், வயநாடு, கோழிக்கோடு, பத்தனம்திட்டா, கண்ணூர், மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய 9 மாவட்ட மக்களுக்கு நேற்று மழை, வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்தது. வரும் 19-ம் தேதிக்கு பின்பு கனமழையில் இருந்து கேரளம் மீளும் என கேரள மாநில வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, 2013-ம் ஆண்டி லும் தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. ஆனால், அப்போது அணைகளில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதேசமயத்தில், 1924-ம் ஆண்டு கேரள மக்களின் இயல்பு வாழ்க்கையை கனமழை புரட்டிப் போட்டது. அதற்கு பின்னர் கேரளம் சந்திக்கும் மிகப்பெரிய இயற்கை பேரிடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகத் தின் கீழ் இயங்கும் பேரிடர் அதி காரிகள் கேரளாவில் மேற்கொண்ட ஆய்வின்போது, மாநிலத்தில் பேரிடர் மீட்பு படை என ஒன்று கூட இல்லாதது ஏன்? என கேள்வி யெழுப்பியுள்ளனர். இதேபோல், மழையைக் கணக்கிட்டு முன் கூட்டியே அணைகளில் தண்ணீரை திறந்து விட அரசு தவறிவிட்டதாக வும் அந்தக் குழுவினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பாலக்காடு, மலப் புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கண்ணூர், எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. இதில் இடுக்கியில் மட்டும் வழக்கத்தை விட 84 சதவிகிதம் கூடுதல் மழை பெய் துள்ளது. இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் 26-ம்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரம் வரை, கேரளத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1,568 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர்.

வெள்ள நிவாரணத்துக்காக ரூ.8,316 கோடியை கேரள அரசு கேட் டிருந்தது. எனினும், மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், கேரள வெள்ளச்சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். அதன் பின்னர், கேரளாவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.

இதுதவிர, வெள்ளத்தில் சிக்கி யுள்ளவர்களை மீட்கும் பணிகளில் 14 ராணுவக் குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. அதுதவிர, கடற் படையைச் சேர்ந்த பல்வேறு குழுக் களும், கடலோரக் காவல் படை யினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனினும், வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங் குள்ளவர்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளதாகக் கூறப்படு கிறது. எனவே, மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக 16 ராணுவக் குழுக் களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x