Published : 17 Aug 2018 08:44 AM
Last Updated : 17 Aug 2018 08:44 AM

நேருவை நேசித்தவர் 

அரசியல்ரீதியாக நேருவுடன் மோதினாலும் அவர் மீது வாஜ்பா்ய் மிகுந்த நன்மதிப்பு கொண்டிருந்தார்.

1997-ல் வாஜ்பாய் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார். அவர் தனது அலுவலகத்துக்கு முதல்முறையாக வந்தபோது சுவரில் மாட்டப்பட்டிருந்த தலைவர்களின் படங்களை பார்த்தார்.

அங்கிருந்த நேருவின் படம் அகற்றப்பட்டிருப்பதை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்தார். தனது செயலாளரை அழைத்தார். உடனடியாக அலுவலக சுவரில் நேருவின் படத்தை மீண்டும் பொருத்தச் செய்தார்.

நேரு இறந்தபோது நாடாளுமன்றத்தில் பேசிய வாஜ்பாய், “ஒரு கனவு பாதியிலேயே மறைந்துவிட்டது. ஒரு பாடல் மவுனமாகி விட்டது. நமக்கெல்லாம் வெளிச்சம் தந்து வழிகாட்டிய மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது” என்று உருக்கமாகப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x