Published : 17 Aug 2018 08:37 AM
Last Updated : 17 Aug 2018 08:37 AM

சாதனையாளர் அடல் பிஹாரி வாஜ்பாய்

முதலில் 13 நாட்கள், பின்னர் 13 மாதங்கள், அதன்பின் முழுமையாக 5 ஆண்டுகள் என மூன்று முறை பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

கடந்த 2001-ல் சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தை வாஜ்பாய் தொடங்கினார்.

அதே ஆண்டில் 6 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி வழங்கும் சர்வ சிக்சா அபியான் திட்டத்தை அமல்படுத்தினார்.

பாரத் அலுமினியம் கம்பெனி, இந்துஸ்தான் ஜின்க், இந்திய பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், வி.எஸ்.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீட்டை அனுமதித்தார்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதிப் பற்றாக்குறை பொறுப் புடைமை சட்டம் கொண்டு வரப்பட் டது. இதன்மூலம் பொதுத்துறை நிறு வனங்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பின. நிதிப்பற்றாக்குறை குறைந்தது. வாஜ்பாய் ஆட்சியின் போது புதிய தொலைத்தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப் பட்டது. இதன்மூலம் தொலைத் தொடர்பு புரட்சிக்கு வித்திடப் பட்டது.

கடந்த 1998 மே 12-ம் தேதி பொக் ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையாகும். அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுக்கு தெரியாமல் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த அணு ஆயுத சோதனை இன்றளவும் மிகச் பெரிய சாதனையாக போற்றப்படுகிறது.

கடந்த 1999-ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அந்த ஊடுருவலை வாஜ்பாய் அரசு வெற்றிகரமாக முறியடித்தது.

இதேபோல கடந்த 2001-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த விவகாரத்தையும் வாஜ்பாய் அரசு சர்வதேச அரங்கில் திறமையாகக் கையாண்டது.

பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த வாஜ்பாய் பல்வேறு நல்லெண்ண முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 1999-ல் சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார். அப்போது லாகூர் உடன்படிக்கை கையெழுத்தானது.

இதன்பின் 2001-ல் நடைபெற்ற ஆக்ரா மாநாட்டில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் வாஜ்பாய் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த 1999 டிசம்பரில் இந்திய பயணிகள் விமானத்தை தீவிர வாதிகள் கடத்தி ஆப்கானிஸ்தா னின் காந்தஹார் விமான நிலை யத்துக்கு கொண்டு வந்தனர். அந்த விவகாரத்தை சாதுரியமாக கையாண்டு 176 பயணிகளையும் 15 விமான நிறுவன ஊழியர்களையும் பத்திரமாக மீட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x