Last Updated : 14 Aug, 2018 08:35 AM

 

Published : 14 Aug 2018 08:35 AM
Last Updated : 14 Aug 2018 08:35 AM

இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது யார், ஆட்சி மாறியது எப்படி?- தகவல் திரட்டும்படி மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது யார், பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் இருந்து ஆட்சி மாறியது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் பதில்கள் கிடைப்ப தில்லை. இந்நிலையில், இந்தத் தகவல்களை திரட்டுமாறு மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணை யம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் தொடர்பான பல்வேறு தகவல்கள், மத்திய அமைச்சகங்களிடம் இருந்து ஆண்டுதோறும் கோரப்படுகின் றன. ஆனால், அந்தத் தகவல்கள் இல்லை என பெரும்பாலும் பதிலளிக்கப்படுகின்றன.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த மதன் லால் நரூலா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை கோரி மனு அளித்திருந்தார். எனினும், இந்தக் கேள்விகளுக்கு நீண்ட நாட்களாகவே பதில் மறுக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக சிஐசியில் லால் நரூலா புகார் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து சிஐசி அண்மையில் விசாரணை நடத்தி யது. அப்போது, சிஐசி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது யார்? இதில் சம்பந்தப் பட்ட இந்தியத் தலைவர்களின் பெயர்கள் யாவை? பிரிட்டன் ராணி யிடம் இருந்து இந்தியாவுக்கு ஆட்சி மாற்றம் நடைபெற்றது எப்படி? இதுதொடர்பான ஆவணங்களில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு அல்லது மகாத்மா காந்தி கையெழுத் திட்டார்களா? பாகிஸ்தான் பிரி வினை ஏற்பட்டது எப்படி? அந்தப் பிரிவினை உத்தரவில் கையொப்பமிட்டது யார்? ஆகிய கேள்விகளுக்கான தகவல்களை மத்திய அரசு திரட்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவானது, பிரதமர் அலுவலகம், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சகங் கள் ஆகியவற்றுக்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத் துடன் மேற்குறிப்பிட்ட மற்ற அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரிட்டன் அரசிடம் இருந்து அந்த தகவல்களை திரட்ட வேண்டும் எனவும் சிஐசி தனது உத்தரவில் கூறியுள்ளது.

முன்னதாக, இதுதொடர்பான விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான உயரதி காரி ஜெயா ரவீந்திரன் கூறுகை யில், “அன்றைய காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட ‘இந்திய சுதந்திரச் சட்டம் - 1947’-இல் உள்ள விவரங் கள் மட்டுமே அரசிடம் இருக்கிறது” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய தகவல் ஆணையர், அந்த விவரங்களை டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேசமயத்தில், அவற்றை தொகுக்க காலக்கெடு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

சிஐசி குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் யாவும், பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை வெளியிட் டால், பல்வேறு சர்ச்சைகள் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில், இவற்றை பிரிட்டன் அரசிடம் இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை கேட்டுப் பெறவில்லை.

தற்போது, சிஐசி உத்தரவின் பேரில், அவை வெளியிடப்பட்டால் பல்வேறு வரலாற்று ஆய்வுக்கு அவை உதவியாக இருக்கும் என வரலாற்றாசிரியர்கள் கருது கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x