Published : 10 Aug 2018 12:02 PM
Last Updated : 10 Aug 2018 12:02 PM

ஜின்னாவை பிரதமராக்க நேரு சம்மதித்திருந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்திருக்கும்: தலாய் லாமா கருத்தால் சர்ச்சை

ஜின்னாவை பிரதமராக்க நேரு சம்மதித்திருந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தலாய் லாமா கூறி இருப்பது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா. இவர் கோவாவில் மாணவர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்  ‘Today’s relevance of India’s Ancient Knowledge’ என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

அப்போது மாணவர் ஒருவர் தலாய் லாமாவிடம் தவறான முடிவுகள் மற்றும் உணர்வுகளிலிருந்து விடுப்படுவது எப்படி?  என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலாய் லாமா,  "பெரிய பகுத்தறிவாளர்களின் முடிவுக்கு முதலில் மதிப்பளிப்பது முக்கியமானது. பின்னர் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அதனை அனைத்து தளங்களிலும் ஆய்வு செய்து முடிவு எடுப்பது நல்லது.

இந்தியாவை திரும்பி பார்த்தால், மகாத்மா காந்தி  இந்தியாவின் பிரதமர் பதவியை ஜின்னாவுக்கு வழங்கவே விரும்பினார். ஆனால் நேரு அதனை ஏற்கவில்லை. நேரு தன்னையே பிரதமராக்க எண்ணினார். ஒருவேளை காந்தியின் விருப்பம் நிறைவேறி இருந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகத்தான் இருந்திருக்கும்.

நேருவை எனக்கு நன்கு தெரியும். அவர் சிறந்த அனுபவமிக்க மனிதர். ஆனால் சில நேரம் அவரும் தவறு செய்திருக்கிறார். அதனால் உங்கள் கடமைகளை உங்கள் தோளில் சுமந்து ஆராயுங்கள். பிறரிடம் அவர்களது கருத்துகளை கேளுங்கள். முடிவு எடுக்கங்கள்” என்றார்.

தலாய் லாமாவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x