Published : 09 Aug 2018 10:22 AM
Last Updated : 09 Aug 2018 10:22 AM

கருணாநிதி மறைவுக்கு புகழஞ்சலி சூட்டிய தெலுங்கு ஊடகங்கள்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவை யொட்டி, தெலுங்கு ஊடகத் தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் புகழஞ்சலி செலுத்தின.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார் என்ற செய்தி வந்ததில் இருந்து, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்தும் திரளான பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்தினர் சென்னையில் குவிந்தனர்.

கருணாநிதியின் உடல் நலத்தில் தொய்வு ஏற்பட்டது என காவேரி மருத்துவமனை அறிவித்ததில் இருந்து, தெலுங்கு ஊடகங்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும், அவரது வாழ்க்கை குறிப்புகள் குறித்தும் செய்தியாக தொகுத்து வழங்கின.

இறுதியில் கலைஞரின் மரண செய்தி அறிந்ததும், நேற்று முன் தினம் மாலை முதல், கருணாநிதி யின் வாழ்க்கைக் குறிப்புகளை யும், அவரது அரசியல் அனுபவங் கள், அவர் கடந்து வந்த பாதை கள், சாதனைகள், சோதனைகள், வீழ்ச்சி, எழுச்சி என அலசின.

தென்னகத்து திராவிட தலைமகன் என அவை புகழாரம் சூட்டின. தொடர்ந்து 24 மணி நேர மும், அவரது இறுதி ஊர்வலம், தலைவர்களின் அஞ்சலி, கதறல் என அவரது உடல் அடக்கம் வரை 24 மணி நேரமும் ஒளிபரப்பின. தெலுங்கு பத்திரிகைகளும், கலைஞரின் வரலாற்றை பறை சாற்றி ஒரு தமிழனுக்கு அஞ்சலி செலுத்தி சகோதர பாசத்தை வெளிக்காட்டின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x