Published : 06 Aug 2018 09:19 AM
Last Updated : 06 Aug 2018 09:19 AM

திருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம்:மாணவர்கள், பெற்றோர் பீதி

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்க டேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட தால் மாணவர்கள் பீதி அடைந் துள்ளனர்.

திருப்பதி நகரில் அலிபிரி மலை யடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், இதே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவியருக்கென தனித் தனியாக தங்கும் விடுதிகளும் உள்ளன. இதில் நூற்றுக்கணக் கானோர் தங்கிப் படித்து வரு கின்றனர்.

இந்நிலையில், இந்த பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலை அரங்கத்தின் அருகே 2 கன்றுக் குட்டிகள் நேற்று இறந்து கிடந்தன. அப்பகுதி முழுவதும் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. உடனடியாக இதுகுறித்து மாண வர்கள் பேராசியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், துணைவேந்தர் தாமோதரம், போலீ ஸார், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, சிறுத்தையின் கால் தடம் பதிந்திருந்தது தெரிய வந்தது. இதனால், இப்பகு திக்கு சிறுத்தை வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், விடுதி மாணவர்கள், வழக்கம்போல காற்றோட்டமாக வெளியில் படுக்காமல், விடுதிக்குள் படுத்து தூங்கி உள்ளனர்.

இதனால், சிறுத்தையின் பிடியில் இருந்து மாணவர்கள் தப்பி உள்ளது தெரியவந்துள்ளது. சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால், மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரும் பீதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x