Published : 06 Aug 2018 09:31 AM
Last Updated : 06 Aug 2018 09:31 AM

‘கிகி’ பாடலுக்கு ஏர் உழுதுகொண்டே நடனமாடிய சகோதரர்கள்: வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்

கனடாவைச் சேர்ந்த பாடகர் டிரேக், கடந்த மாதம் ‘ஸ்கார்பியன்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில் ‘கிகி டூ யூ லவ் மீ’ (Kiki do you love me) என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர் ஷாகி, ‘கிகி’ பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை ஹாலிவுட் உட்பட பல்வேறு பிரபலங்கள் சவாலாக எடுத்து ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி வீடியோக்களை வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக உலகம் முழுவதும் பரவியது.

பாலிவுட் நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோரும் தமிழ் நடிகை ரெஜினா கசான்ட்ராவும் ஓடும் காரில் இருந்து இறங்கி சாலையில் நடனமாடினர். டெல்லி, மும்பை, சண்டிகர், பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்களும் இளம்பெண்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இதில் சிலர் விபத்திலும் சிக்கினர். இதையடுத்து, இந்த நடனம் ஆபத்தானது என்றும் இதனால் விபத்து நேரிடும் என்று போலீஸார் எச்சரித்தனர்.

இதை அறிந்த திரைப்பட தயாரிப்பாளர் ஸ்ரீராம் ஸ்ரீகாந்த், அந்த நடனங்களைப் பார்த்தார். இது மிகவும் ஆபத்தானதுதான் என்றாலும் பாடல் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தார். இதையடுத்து, பாதுகாப்பான இடத்தில் கிகி பாடலை படம் பிடிக்க முடிவு செய்தார்.

இதுகுறித்து தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கீலா அனில் குமார் (24) மற்றும் அவரது சகோதரர் பில்லி திருப்பதி (28) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஒப்புக் கொண்டதையடுத்து, பயிற்சிக்குப் பிறகு அவர்களது நடனத்தைப் படம் பிடித்த காந்த், தனது யூ-டியூப் சேனலில் ‘எனது கிராம காட்சி’ என்ற பெயரில் பதிவேற்றி உள்ளார்.

அதில் இருவரும், நிலத்தில் ஏர் உழுது கொண்டே கிகி பாடலுக்கு நடனமாடி உள்ள னர். முழங்கால் சேற்றிலும் மிக நேர்த்தியாக நடனக் கலைஞர்களைப் போல அந்த சகோதரர்கள் நடனமாடி உள்ளனர். இதனால் இந்த வீடியோ சமூக வலை தளங் களில் வேகமாக பரவி வரு கிறது. இதுவரை பல லட்சக் கணக்கானோர் பார்த்துள்ள னர். நிமிடத்துக்கு நிமிடம் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x