Last Updated : 24 Jul, 2018 08:03 PM

 

Published : 24 Jul 2018 08:03 PM
Last Updated : 24 Jul 2018 08:03 PM

ராகுல் மட்டுமே எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் கிடையாது: தேஜஸ்வீ யாதவ் கருத்து

ராகுல் காந்தி மட்டுமே எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இல்லை என லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வீ யாதவ் கருத்து கூறி உள்ளார். இது குறித்து அவர் இன்று பாட்னாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வீ யாதவ், ‘அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான போட்டியில் ராகுல் காந்தி ஒருவர் மட்டும் இல்லை.’ எனத் தெரிவித்தார்.

’எதிர்கட்சிகளின் மற்ற சில தலைவர்களான திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் பகுஜன் சமாஜுன் மாயாவதி போன்றவர்களும் பிரதமருக்கான போட்டியில் உள்ளனர்.’ எனவும் தேஜஸ்வீ கருத்து கூறி உள்ளார்.

எதிர்கட்சிகள் பேசி முடிவு எடுக்கும் பிரதமர் வேட்பாளர் யாராக இருப்பினும், அவர் ராகுல் என்றாலும் தமது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அவரை ஆதரிக்கும் எனவும் தேஜஸ்வீ உறுதி அளித்தார். பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் அனைவரையும் ராகுல் காந்தி ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் தேஜஸ்வீ வலியுறுத்தி உள்ளார்.

பிஹாரின் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் பல ஆண்டுகளாக காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து பல தேர்தல்களில் போட்டியிட்ட கட்சி ஆகும். இதன் நிறுவனரும் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல்

வழக்கில் தண்டணை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல் நலம் குன்றியதன் காரணமாக லாலு ஜாமீனில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x