Published : 22 Jul 2018 08:55 AM
Last Updated : 22 Jul 2018 08:55 AM

‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்

கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்துகொண்ட காதலர்கள் இரு வர், தங்களை கொலை செய்து விடாதீர்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கேரளாவில் கவுரவக் கொலைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அண்மை யில், கோட்டயம் மாவட்டத்தில் ஜாதி மாறி திருமணம் செய்த கெவின் என்ற இளைஞர், அவரது மனைவியின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், கேரள காதல் தம்பதி ஒன்று, தங்களை கொலை செய்துவிட வேண்டாம் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தின் அட்டிங்கல் என்ற பகுதியைச் சேர்ந்த ஹாரிஸன் ஹாரிஸ் (20) என்ற கிறிஸ்தவ இளைஞரும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா (19) என்ற முஸ்லிம் பெண்ணும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.

இவர்களின் திருமணத்துக்கு மணமகன் வீட்டில் சம்மதம் தெரிவித்தபோதிலும், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்ற னர். மேலும், தங்கள் வீட்டு பெண்ணை ஹாரிஸன் கடத்திச் சென்றுவிட்டதாகவும் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், காதலர்கள் இருவரும் மணமக்கள் கோலத்தில் பேஸ்புக் வலைதளத்தில் நேற்று முன்தினம் நேரலை வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளனர். அதில், தாங்கள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், தங்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும், எஸ்டிபிஐ கட்சியினரிடமிருந்தும் கொலை மிரட்டல் வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புவதாகவும், தங் களைக் கொலை செய்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக் கின்றனர். இதனிடையே, இந்த வீடியோவை பதிவு செய்த பிறகு, காதலர்கள் அட்டிங்கல் காவல் நிலையத்தில் சரண டைந்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x