Last Updated : 22 Jul, 2018 08:49 AM

 

Published : 22 Jul 2018 08:49 AM
Last Updated : 22 Jul 2018 08:49 AM

மாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்

பள்ளி மாணவனின் தலைமுடியை ஆசிரியை வெட்டியெறிந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ளது விஷ்ராந்த்வாடி புனே சர்வதேச பள்ளி. இந்தப் பள்ளியில் 6-வது வகுப்பில் மாணவன் ஆர்யன் அமித் வாக்மேர் படித்து வருகிறான். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு மாணவன் ஆர்யன் சென்றிருந்தான்.

அப்போது பள்ளி வகுப்பறை யில் அனைத்து மாணவர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆர்யனை அருகில் அழைத்து அவனது தலையின் முன்பகுதி, பக்கவாட்டு பகுதிகளி்ல் இருந்த முடியை ஆசிரியை ஸ்வேதா குப்தா வெட்டிவிட்டார்.

இதுதொடர்பாக வீட்டுக்குச் சென்ற ஆர்யன் தனது தாய் ஆதித்தி வாக்மேரிடம் புகார் தெரிவித்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலால் கோபமடைந்த ஆதித்தி, புனே விஷ்ராந்த்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் மேலும் கூறும்போது, “எனது மகன் தவறு செய்திருந்தால் தண்டனை தரலாம். ஆனால் தவறு செய்யாத நிலையில் அவனது தலைமுடியை ஏன் வெட்டவேண்டும். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. நான் அதை அப்போது பெரிதுபடுத்தவில்லை. இப்போது பள்ளியிலும், போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், பள்ளி நிர்வாகத்தாரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை ஸ்வேதா குப்தா சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x