Published : 21 Jul 2018 08:51 AM
Last Updated : 21 Jul 2018 08:51 AM

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெளிநாட்டு வாழ் இந்தியர் களை (என்ஆர்ஐ) திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யுள்ளது. மேலும் சிலர், தங்களின் மனைவிகளை சட்டவிரோதமாக கைவிட்டு விடுகின்றனர்.

இதை தடுக்க, தாய்நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், திருமணத்தை 7 நாட்களுக்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது.

இந்நிலையில், மனைவிகளை கைவிட்டு தலைமறைவாகிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குறித்த விவரங்களும் சேகரிக் கப்பட்டு வருகின்றன. அதன்படி, 70 வெளிநாட்டு வாழ் இந்தியர் கள், இவ்வாறு மனைவியை கைவிட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 8 பேரின் பாஸ்போர்ட்கள் முதல்கட்ட மாக ரத்து செய்யப்பட்டிருக்கின் றன. அவர்களுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ்களும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x