Published : 21 Jul 2018 08:42 AM
Last Updated : 21 Jul 2018 08:42 AM

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அரசுக்கு போதிய அளவில் ஆதரவு இருந்ததால், இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. இந்நிலையில், இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் இந்த நம்பிக்கை யில்லா தீர்மானமானது எனது தலைமையிலான அரசுக்கு எதிரானது அல்ல. இதனை, நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு எதிரான தீர்மானமாகவே நான் கருதுகிறேன். இந்தத் தீர்மானத்தின் ஒரே நோக்கம், பிரதமர் பதவியிலிருந்து என்னை அகற்றுவதுதான்.

அதனால்தான், என்னைக் கட்டியணைப்பதற்கு முன்பாக, நாற்காலியை விட்டு எழுந்திருங்கள்: எழுந்திருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ராகுலுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாற்காலி 125 கோடி இந்திய மக்கள் எனக்கு கொடுத்த நாற்காலி. அவர்களின் ஆசி இருக்கும் வரையில், இந்த நாற்காலியைவிட்டு என்னை யாராலும் அகற்ற முடியாது.

அரசுக்கு ஆதரவாக போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பது தெரிந்தும், ஏன் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது? அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாதா என்ன? அவர்களுக்கு தெரியும். ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தன்னை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிவதற்காக ராகுல் காந்தி வகுத்த வியூகமே இது.

ராகுல் காந்தி அவர்களே, கட்சிகளின் ஆதரவு இருப்பதால் மட்டுமே ஒருவர் பிரதமராகிவிட முடியாது. அதற்கு மக்களின் பேராதரவும் வேண்டும். அதனை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங் கள். இனியும், இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விளை யாட்டை விளையாடாதீர்கள். எனது தலைமையிலான அரசு, மக்களின் வளர்ச்சியை மட்டுமே முழு மூச்சாக கொண்டு செயல் பட்டு வருகிறது. உங்களின் (ராகுல் காந்தி) பதவி ஆசைக்காக எங்களின் செயல்பாடுகளை நீங்கள் கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. பாகிஸ் தானில் துல்லியத் தாக்குதல் நடைபெறவில்லை என அவை தெரிவிக்கின்றன. உங்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், இவற்றை நிரூபித்துக் காட்டுங்கள். உங்களின் ஆதாயத் துக்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைக்க நீங்கள் துணிந்துவிட்டீர்கள். இந்த செயலை நமது நாட்டு மக்கள் கட்டாயமாக மன்னிக்க மாட்டார்கள். இதற்கான விலையை அடுத்த தேர்தலில் நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்கள் அமைதியான முறையில் பிரிக்கப்பட்டன. அங்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை. அந்த மூன்று மாநிலங்களும் நன்றாக வளர்ச்சி பெற்று வருகின்றன. அதேசமயத்தில், ஆந்திரா மாநிலத்தை காங்கிரஸ் பிரித்தது. ஆனால், அந்த மாநிலத்தை பிரித்த விதமும், காங்கிரஸ் கட்சி செயல்பட்ட விதமும் அவமானத்துக்கு உரியவை. இது ஒன்றும் புதிதல்ல. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தே இது தொடர்கிறது.

ஆந்திரப் பிரிவினைக்குப் பிறகு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற எனது தலைமையிலான மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது. ஆந்திராவுக்காக சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கிடைக்கின்ற பலனைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் ஆங்காங்கே கும்பல் வன்முறைச் சம்பவங் கள் நடைபெறுகின்றன. இது, மனிதநேயத்துக்கும், மனிதத் தன்மைக்கும் முற்றிலும் எதிரான தாகும். இவ்வாறு நடைபெறும் சம்பவங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். இந்த செயல்களைத் தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்தியில் பாஜக தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற நான்கே ஆண்டுகளில், மக்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள் ளன. விவசாயிகளின் வரு மானத்தை இரட்டிப்பாக்கு வதற்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்தது முதலாக, மின்சாரமே கிடைக்கப்பெறாத கிராமங்களுக்கு எங்கள் ஆட்சியில்தான் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங் களுக்கு சாலைகள் போடப் பட்டிருக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும் ஏராள மான சட்டங்கள் இயற்றப்பட்டிருக் கின்றன. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை வெறும் 4 ஆண்டு களில் பாஜக செய்திருக்கிறது. இதிலிருந்தே, தங்களுக்காக பாடுபடுகிற கட்சி எது என்பதை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x