Published : 21 Jul 2018 08:15 AM
Last Updated : 21 Jul 2018 08:15 AM

மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி- 12 மணி நேர விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு

மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லா தீர்மானம் தோல்வி யடைந்தது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி. கேசி னேனி நிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

அவை தொடங்கியதும் பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தெலுங்கு தேசம் எம்.பி. ஜெய தேவ் காலா கல்லா பேசிய போது, "குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை நிறுவ ரூ.3,000 கோடி, மகாராஷ் டிராவில் சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவ ரூ.3,000 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. ஆந்திராவின் புதிய தலைநகரை நிர்மாணிக்க ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இறுதியில் மோடியின் இருக் கைக்கு சென்று அவரை கட்டியணைத்தார். பிரதமர் மோடியும் சிரித்துக் கொண்டே ராகுலின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருக்கையில் அமர்ந்த ராகுல் காங்கிரஸ் எம்.பி.க்களை பார்த்து கண் சிமிட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி ஆளும் பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் மத்திய அமைச் சர் ராஜ்நாத் சிங் பேசிய போது, "பாஜக 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது மக்களின் தீர்ப்பை மதித்து நடந்தோம். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வில்லை" என்று தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்கின் பேச்சை கண்டித்து தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து அவை மீண்டும் ஒத்திவைக்கப் பட்டது.

மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறு வதாக இருந்தது. ஆனால் இரவு வரை விவாதம் நீடித்தது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பேசிய பிறகு இரவு 9.15 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ராகுல் காந்தி கட்டியணைத் ததை குறிப்பிட்ட பிரதமர் மோடி, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று விமர் சித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷத்துக்கு நடுவில் மோடி தொடர்ந்து பேசினார்.

இரவு 10.50-க்கு அவர் தனது உரையை நிறைவு செய் தார். கடைசியாக தெலுங்கு தேசம் எம்.பி. கேசினேனி ஸ்ரீநிவாச ரெட்டி பேசினார். அவை தொடங்கியதுமே பிஜு ஜனதா தளத்தின் 20 எம்.பி.க் களும் வெளிநடப்பு செய்த னர். சிவசேனாவின் 18 எம்.பி.க் களும் அவைக்கு வரவில்லை.

சுமார் 12 மணி நேர விவாதத் துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x