Last Updated : 20 Jul, 2018 05:17 PM

 

Published : 20 Jul 2018 05:17 PM
Last Updated : 20 Jul 2018 05:17 PM

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்த ராகுல்: இந்தியில் தெளிவில்லாததால் பாஜகவினர் சிரிப்பலை

நம்பியிக்கையில்லாத் தீர்மானம் மீது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சித்தார். அப்போது அவர் பேசிய இந்தியில் தெளிவில்லாததால் மக்களவையில் இருந்த பாஜகவினரிடம் சிரிப்பலை எழுந்தது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வந்தது. அது தொடர்பான விவாதம் இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பாஜக எம்.பி. காலா பேசிய பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்தார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசுகையில், ’பிஎம் பாஹர் மே ஜாத்தே ஹைன் (பிரதமர் வெளியில் போகிறார் என்றால்)’ எனத் தெரிவித்தார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் இடையே லேசான சிரிப்பலை எழுந்தது. பிறகு இதை தெளிவாக நாம் எடுத்துரைக்கவில்லை என்பதால் பாஜகவினர் சிரிப்பதாக ராகுல் உணர்ந்தார்.

உடனே தன்னை சுதாரித்துக் கொண்ட ராகுல், ‘பாஹர் ஜாத்தே ஹன் மீனிங் அப்ராட்,…டு ஒபாமாஜி…டு ட்ரம்ப்ஜி…(வெளியில் போவது என்பதன் அர்த்தம் வெளிநாடுகள்,… ஒபாமாஜியிடம்…ட்ரம்ஜியிடம்…)’ என திருத்தமாகத் தெரிவித்தார். இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்திருந்தது.

எனினும், ராகுலின் விளக்கம் பாஜகவினர் இடையே மேலும் சிரிப்பலையைக் கூட்டியது. பிரதமர் மோடியும் அடக்க முடியாமல் சிரித்தார். இதை பொருட்படுத்தாமல் தன் பேச்சை ராகுல் தொடர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x