Last Updated : 20 Jul, 2018 04:38 PM

 

Published : 20 Jul 2018 04:38 PM
Last Updated : 20 Jul 2018 04:38 PM

ஆப்பிள் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சிறுவன் உடல் கண்டெடுப்பு: குப்வாரா நகரில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டதையொட்டி வடக்கு காஷ்மீரின் குப்வாரா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் மூடப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் முழுமையான வேலை நிறுத்தத்திற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த 10 வயது சிறுவன் பெயர் உமர் பாரூக், குல்காம் கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்று மாலை சிறுவனின் படுகொலை செய்தி பரவிய உடன் இரவு சாலையை வழிமறித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கை வெட்டப்பட்ட நிலையில் உடல் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆப்பிள் பழத்தோட்டத்திலிருந்து இச்சிறுவனின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து விவரங்களைச் சேகரிப்பதற்காக அங்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு போலீஸாரை, சிறுவன் படுகொலை குறித்து கோபமடைந்த கும்பல் ஒன்று அடித்து வீழ்த்தியது. எந்தவித காரணமுமின்றி காவலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஷாப்கத் ஹூசேய்ன் இதுகுறித்து கூறுகையில், ''சம்பவ இடத்தில் விசாரணைக்குச் சென்ற காவலரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x