Published : 20 Jul 2018 09:03 AM
Last Updated : 20 Jul 2018 09:03 AM

‘பசு பாதுகாப்பு’ பெயரில் நடக்கும் வன்முறையை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடைபெறும் வன்முறை சம்பவங் கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் பேசிய போது, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பசு பாதுகாப்பு’ பெயரில் அப் பாவியை கொலை செய்த கும் பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை அண்மையில் சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு அமைச்சர் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித் துள்ளார். அப்பாவிகளை கொலை செய்ய பாஜக மாநில அரசுகள் உளவுத் துறையை பயன்படுத்து கின்றன” என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: கும்பலாக சேர்ந்து வன்முறை யில் ஈடுபடுவதால் பலர் உயிரிழந் துள்ளனர். இது கவலையளிக்கும் விஷயமாகும்.

‘கும்பல் வன்முறை’ விவகாரத் தில் மாநில அரசுகளே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக 2016 மற்றும் நடப்பாண்டிலும் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x