Published : 20 Jul 2018 08:27 AM
Last Updated : 20 Jul 2018 08:27 AM

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க தேவசம் போர்டு எதிர்ப்பு

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று 3-வது நாளாக நடந்தது.

திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘‘சபரிமலையில் முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களால் 41 நாட்கள் விரதம் மேற்கொள்வது கடினம். கோயிலின் மரபுப்படி மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களை அனுமதிப்பதில்லை. சபரி மலையை தவிர்த்து இதர ஐயப்பன் கோயில்களில் பெண் கள் வழிபடலாமே” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘நாடு முழுவதும் ஏராளமான ஜெகந்நாதர் கோயில்கள் உள்ளன. ஆனால் புரி கோயிலில்தான் பக்தர்கள் குவிகின்றனர். எந்த கோயிலுக்கு செல்வது என்பது மக்களின் விருப்பம்” என்று கூறினார்.

கேரள அரசு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதாடியபோது, ‘‘50-55 வயது வரை ஒருவர் உயிரோடு வாழ்வார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x