Last Updated : 17 Jul, 2018 05:31 PM

 

Published : 17 Jul 2018 05:31 PM
Last Updated : 17 Jul 2018 05:31 PM

உத்தரகாண்டில் பலத்த மழை: பாலம் உடைந்ததால் கயிறு ஏணியில் செல்லும் பள்ளி மாணவர்கள்

சமீபத்தில் பெய்த கடுமையான மழைக்கு ஊருக்கு அருகில் இருந்த பாலம் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் தற்போது மாணவர்கள் மலைக்குன்றின் வழியாக பள்ளி செல்வதற்காக கயிறு ஏணியை பயன்படுத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. சமீபத்தில் அஸாமில் பெய்த பலத்த மழை காரணமாக கிராமத்து மக்களின் பயன்பாட்டில் இருந்த கலாச்சி ஆற்றுப் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அஸாம்

இதைத் தொடர்ந்து அம்மக்கள் மூங்கில் பாலங்களை கட்டமைத்துக்கொண்டு அதில் நடக்கத் தொடங்கினார். அவர்கள் தங்கள் சோகங்களை விவரிக்கும் வகையில், அந்த பாலத்தை மறுசீரமைக்க எந்தவொரு முயற்சியும் செய்யாததற்காக கிராம மக்கள் மாநில அரசு நிர்வாகத்தை விமர்சித்தனர்.

அப்பகுதியில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் கூறுகையில், ''அரசாங்கம் பாலம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிறைய மாணவர்கள் இந்த மூங்கில் பாலத்தின் வழியாகத்தான் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று வருகிறார்கள்'' என்றார்.

கர்நாடகா

கர்நாடகா மாநிலத்திலும் கடும் மழை பெய்து வருகிறது. இங்குள்ள கிராமங்களிலும் இதே நிலைதான். சிக்மக்ளூர் பகுதியில் ஒரு பெரிய பாலம் பாதி இடிந்து விழுந்துவிட்டது.

இதனோடு சில மரத் திம்மைகளை கட்டி கரையில் பொருத்தி அதன் மீது நடந்துசெல்கிறார்கள் இங்குள்ள மக்கள். நிற்காமல் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் இந்த இணைப்புப் பாலமும் சேதமடைந்து விட்டது.

தற்போது பெருக்கெடுக்கும் வெள்ளத்தையும் மீறி துணிந்து படகில் சென்று வருகிறார்கள் சிக்மக்ளூர் பகுதி கிராம மக்கள்.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்டிலும் கடும் மழை பெய்து வருவதால் இங்கு பாலங்கள் உடைந்து தண்ணீரில் மூழ்கிவிட்டன.

இதனால் பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள குன்றைக் கடந்து செல்ல முடிவெடுத்து பெரிய பெரிய கயிறுகளை உச்சியில் கட்டி அதன்வழியே ஏறி சென்று வருகிறார்கள். இது எவ்வகையிலும் ஆபத்தானதுதான் என்கிறார்கள் கிராம வாசிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x