Published : 17 Jul 2018 05:20 PM
Last Updated : 17 Jul 2018 05:20 PM

எல்லோரும் கூடி குப்பைகளை அகற்றுவோம் - கடற்கரையை சுத்தப்படுத்தும் மும்பைவாசிகள்

வீட்டு வாசலில் சேரும் தெருக் குப்பைகளைக் கண்டாலே முகம்சுளிக்கும் மக்கள் நிறைந்த நகரப் பகுதிகளில்தான் கடற்கரையை தூய்மை செய்வோம் கிளம்பியிருக்கிறார்கள் மும்பைவாசிகள்.

இவர்களது கைவண்ணத்தில் மட்டும் கடந்த வாரம் மும்பை கடற்கரை முழுவதும் தேங்கியிருந்த 250 டன் குப்பையை அகற்றப்பட்டுள்ளது. பிஎம்சி (பிரிஹம்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன்) மதிப்பீட்டின்படி வாரந்தோறும் மும்பை நகரின் கடற்கரை யோரங்களில் மட்டும் 400 டன் என்ற இலக்கை நோக்கி குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை அன்று 1,500 தன்னார்வலர்கள் கொண்ட ஒரு 24 மணிநேர சிறப்பு துப்புரவுக் குழு வைத்துக்கொண்டு குவாத்ரா குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு முதல் தாதர் கடற்கரையின் நீளத்தை சுத்தம் செய்து வரும் ஆர்னா பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் குத்வாரா

இதுகுறித்து தெரிவிக்கையில், ''குப்பைகளை கடலுக்குச் செல்லாமல் தடுக்க இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. கடற்கரையில் காணப்படும் குப்பைகளை அகற்றுவதில் எங்களுக்கு எவ்விதமான மனச்சோர்வும் இல்லை.

எங்களால் முடிந்தவரை குப்பைகளை அகற்றிவருகிறோம். உதவிக்கு ஆட்கள் இன்னும் சேர்ந்தால் இன்னும் நிறைய குப்பைகளை அகற்ற முடிந்தால் அது இன்றும் நன்றாக இருக்குமே என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது.

தாதரிலிருந்து வோர்லி கோட்டை வரை உள்ள கடற்கரையில் மட்டும் 200 டன் குப்பைகளை நாங்கள் அப்புறப்படுத்தினோம். ஆனால் இன்னும் நிறைய குப்பை உள்ளது; இப்படி ஏராளமான குப்பைகளை வீசிச்செல்வபவர்கள் மீது பெரிய அபராதங்களை விதிக்க வேண்டும்'' என்றார்.

மஹீம் இணையர் இந்திரானில் சென்குப்தா மற்றும் ரபியா திவாரி மட்டுமே தங்கள் கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட 30 டன்னிலிருந்து 50 டன் வரையிலான குப்பைகளை அகற்றியுள்ளனர்.

ஞாயிறன்று, கிட்டத்தட்ட இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவுகள் 'சம்பூர்ணா எர்த்'துக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர். 'சம்பூர்ணா எர்த்' என்பது மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் அமைப்பாகும்.

''துரதிருஷ்டவசமாக, நிறைய குப்பை இன்னும் அகற்றப்பட வேண்டி உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கள் உதவிக்கு தேவைப்படுகிறார்கள்.

உயரமான மற்றும் தாழ்வான அலைகள் வேகமாக வந்து குப்பையை எடுக்கவிடாமல் செய்கின்றன. இதனால் எங்களுக்கு உதவி செய்ய பிஎம்சி துப்புரவு பணியாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது'' என்கிறார் சென்குப்தா.

ஜே ஸ்ரீரிங்கார்பூர்

தாதர் கடற்கரையில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மற்றுமொரு தன்னார்வலரான ஜே ஸ்ரீரிங்கார்பூர், ''பிளாஸ்டிக் தடையை கடுமையாக வலியுறுத்தவேண்டும். ஏனெனில் இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள்தான் அதிகம் உள்ளன'' என்று கூறினார். இவர் கடந்த ஞாயிறு அன்று மட்டும் 2 டன் குப்பைகளை 15 தன்னார்வலர்களைக் கொண்டு அகற்றியுள்ளார்.

தேர் இழுக்கத்தான் ஊர் கூட வேண்டுமென்பதில்லை. நம் வாழும் நகரத்தை தூய்மையாக வைத்திருக்கவும் ஊர் கூட வேண்டும் என்று இருகரம் கூப்பி அழைக்கிறார்கள் இந்த தன்னார்வலர்கள். மனம் இருந்தால் மார்க்கம் மட்டும் அல்ல மகிழ்ச்சியும் உண்டு என்பதை அவர்களின் சாதனைகளில் பார்க்கமுடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x