Published : 17 Jul 2018 03:30 PM
Last Updated : 17 Jul 2018 03:30 PM

காங்கிரஸ் முஸ்லிம் கட்சி: பாஜக சர்ச்சை; ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் முஸ்லிம் கட்சி எனக் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், இதற்கு ராகுல் காந்தி இன்று பதிலளித்துள்ளார். அதில் ஒரு காங்கிரஸ்காரனாக வெறுப்புணர்வை அழிக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, முஸ்லிம் சமூக அறிஞர்கள் சிலர் அண்மையில் சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என அவர்களிடம் ராகுல் காந்தி கூறியதாக உருது பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, பாஜக அமைச்சர்கள் ராகுல் காந்தியை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும் இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் கடுமையாக சாடினார். பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்கெனவே நிராகரித்துள்ளனர். இந்தநிலையில் பாஜகவின் புகாருக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘‘ மதம், ஜாதி அல்லது நம்பிக்கைகள் என்பவை என்னை பொறுத்தவரை சாதாரணமானவை தான். எனது கொள்கைகளில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இதன் மூலம் வேதனையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்த முயலுபவர்களை நான் புறந்தள்ள விரும்புகிறேன். அச்சத்தையும், வெறுப்பையும் நான் இல்லாமல் செய்யவே எண்ணுகிறேன். ஒரு காங்கிரஸ்காரனாக வாழும் அனைவரையும் நேசிக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x