Last Updated : 17 Jul, 2018 10:16 AM

 

Published : 17 Jul 2018 10:16 AM
Last Updated : 17 Jul 2018 10:16 AM

வீடுதேடி வரும் 100 வகை அரசு சான்றிதழ் சேவைகள்: டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமலாக்குகிறது

ஓட்டுநர் உரிமம், பிறப்பு, சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 வகையான அரசு சேவைகள் டெல்லிவாசிகளின் வீடு தேடிவர உள்ளது. நாட்டில் முதன்முறையாக வித்தியாசமான திட்டத்தை  ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அமலாக்குகிறது.

அரசு சான்றிதழ்கள் பெற வேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால், அவர்களுக்கு பலமணி நேரம் வீணாவது வழக்கமாக உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாகவும் புகார்கள் உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த வருடம் நவம்பரில் ஒரு புதிய திட்டம் அமலாக்க முடிவு செய்தது. அதன்படி, சாதி

உள்ளிட்ட அனைத்து வகையான அரசு சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டுவரி உட்பட 100 வகையான அரசு சேவைகளுக்காக டெல்லி வாசிகளின் வீட்டுக்கே சென்று வழங்க திட்டமிட்டனர். ‘மொபைல் சஹாயக்(மொபைல் நண்பர்)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்தமாதம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலாக்கப்படுகிறது.

அரசு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பிறகு அவர்களுடன் பேசி நேரம் குறித்த பின் பொதுமக்கள் வீடு தேடி அரசு சார்பில் அலுவலர் வருவார். இவர், தேவையான ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் படம் எடுத்து பதிவு செய்து கொள்வார். ஓட்டுநர் உரிமம் பெறுவோர் வாகனத் தேர்விற்காக மட்டும் அருகிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஒருமுறை செல்ல வேண்டி இருக்கும்.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, ‘‘இந்த சேவை விடுமுறை நாட்களிலும் கிடைக்க உள்ளது. இதனால், லஞ்சம் ஒழிக்கப்படும். இதன் பலன் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த ‘மொபைல் நண்பன்’ திட்டம் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

பொதுமக்களில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் ரூ.50 இதன் சேவைக்கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன சான்றிதழ்களின் நகல் பெறும் வசதியும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x