Last Updated : 17 Jul, 2018 10:06 AM

 

Published : 17 Jul 2018 10:06 AM
Last Updated : 17 Jul 2018 10:06 AM

மம்தா ஆட்சியில் ஜனநாயகப் படுகொலை: மேற்குவங்க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

மேற்குவங்க மாநிலம் மிதினாபூரில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நரேந்திர மோடி பேசியதாவது:

நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எண் ணற்ற நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி மற்றும் ஆதார் போன்ற திட்டங்களால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். தற்போது, ஏழைகளுக்கான மானியம் எந்தவித இடையூறுமின்றி நேரடியாக அவர்களை சென்றடைகிறது. பாஜக, ஏழைகளுக்கான கட்சி என்பதற்கு இதைவிட வேறு சான்று என்ன தேவை?

பாஜக ஆட்சியின் கீழ், நாட் டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. மத்திய அரசின்

பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வேளாண் நீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் விவசாயிகள் பயன

டைந்து வருகின்றனர். வரும் 2002-ம் ஆண்டு, நமது நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாக வேண்டும் என்ற குறிக்கோளை அடைய மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

அதேசமயத்தில், மேற்குவங்கத் தில் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இங்கு முதல்வர் மம்தா பாஜனர்ஜி தலைமையிலான ஆட்சியின் கீழ் ஜனநாயகப் படு கொலை நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் விவசாயிகள் நசுக்கப்படுகிறார்கள். இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பல அதிகாரக் குழுக்

கள் (சிண்டிகேட்) நியமிக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் குழுக் களின் அனுமதியில்லாமல் மாநிலத்தில் எந்தத் திட்டமும் நிறைவேறாது என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்

தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந் துள்ளது. ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x