Last Updated : 10 Jul, 2018 03:21 PM

 

Published : 10 Jul 2018 03:21 PM
Last Updated : 10 Jul 2018 03:21 PM

இணைப் பேராசிரியரை அடித்த மாணவனால் இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகம்

பாபாசாஹேப் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியரை அவரது மாணவர் ஒருவர் அடித்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு காரணமான பி.எச்டி ஆய்வு மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் எல் சி மல்லையா பிடிஐயிடம் தெரிவித்த விவரம்:

பிஎச்டி ஆய்வு மாணவர் ஒருவர் நேற்று மாலை 3.25 மணியளவில் என்னிடம் முறைகேடாக நடந்துகொண்டார். கைநீட்டி அடிக்கவும் செய்தார். இந்த ஆய்வு மாணவரின் கோபத்துக்குக் காரணம் சென்ற மாதம் நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் விடுமுறையில் இருந்தேன்.

சென்ற மாதம், புறத் தேர்வாளர் (எக்ஸ்டர்னல் எக்ஸாமினர்) இவரது ஆய்வுகளை சரிபார்த்து திருத்தி பிறகு சமர்ப்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதாக அறிந்தேன்.

ஆனால் இம்மாணவரோ தனது ஆய்வில் திருத்தங்கள் செய்வதையும் மறுமுறை சமர்ப்பிப்பதையும் தவிர்க்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். இச்சம்பவம் சென்ற மாதம் நடந்துள்ளது. நானோ கோடை விடுமுறையில் இருந்தேன்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்தபிறகு இப்போதுதான் நான் அவரைச் சந்திக்கிறேன். என்னைப் பார்த்ததும் ஏதோ ஒரு கோபம் அவரைத் தூண்ட அவர் என்னிடம் சற்றே முறைகேடாக நடந்துகொண்டதோடு என்னை அடிக்கவும் செய்தார். ஆனால் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

காரணம், மாணவரைப் போலவே நானும் ஆவேசப்பட்டு அவர்மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகள் செய்தால நிச்சயம் பாதிக்கப்படுவதுநான் இல்லை. இம்மாணவரின் எதிர்கால வாழ்க்கைதான். அதற்கு நிச்சயம் நான் காரணமாக இருக்கமாட்டேன்'' என்று கூறினார்.

ஆனால் இச்சம்பவம் சாதாரணமாக முடிந்துவிடவில்லை. பேராசிரியர்கள் இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவன் மீது நடவடிக்கை வேண்டுமென அவரிகள் கோரினர். வேறுவழியின்றி இணைப் பேராசிரியர் மாணவர்மீது போலீஸில் புகார் தெரிவித்ததார். அதன் அடிப்படையில் அம்மாணவர் கைது செய்யப்பட்டார்.

வளாகத்திற்குள் வெளியாட்கள் தாக்குதல்

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவத்தின்மீது ஊடக வெளிச்சம் பாய்ந்தது. வெளியாட்கள் வளாகத்தில் நுழைந்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாகவே உயரதிகாரிகள் உள்ளிட்ட 12 பேராசிரியர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

உரிய உத்தரவு மேலிடத்திலிருந்து வரும் வரை பாபாசாஹேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் திறக்கப்படமாட்டாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x