Published : 09 Jul 2018 04:06 PM
Last Updated : 09 Jul 2018 04:06 PM

ஆதார் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரலை ஒளிபரப்பு: உச்ச நீதிமன்றம் ஆதரவு

ஆதார் மற்றும் தன் பாலின உறவுகளை குற்ற நீக்கம் செய்தல் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யும் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தீட்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதற்கான ஆதரவு தெரிவிக்க அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் நேரலை குறித்த வாய்ப்புகளை ஆமோதிக்க ஜூலை 23-ம் தேதி அவர் இது குறித்து தன் கருத்துகளைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் கொண்ட இதே அமர்வு முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் உதவுமாறு அட்டர்னி ஜெனரலை கேட்டுக் கொண்டது. அதாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை நேரலையாக ஒளிபரப்புவது குறித்த மனு மீது ஆர்வம் காட்டப்பட்டது.

இந்த மனுவைச் செய்தவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கூறும்போது, உலகம் முழுதும் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை நடைமுறைகளைப் பதிவு செய்கின்றன, ஒவ்வொரு கோர்ட்டும் ஒவ்வொரு விதத்தில் இதனைச் செய்கின்றன என்றார்.

ஆனால் இந்தியாவில் சில நீதிபதிகள் கோர்ட் நடைமுறைகளைப் பதிவு செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர், ஏனெனில் ஒவ்வொரு வாக்கியமும் பதிவாகும் என்று கூறிய இந்திரா ஜெய்சிங், ஆனால் இந்த மறுப்பை தீர்க்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்றார்.

“சில நீதிமன்றங்கள் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு கோர்ட் நடைமுறைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட அனுமதிக்கிறது. சில கோர்ட்கள் எடிட் செய்து வெளியிடுகின்றன. எனவே பல வழிமுறைகள் உள்ளன” என்றார் இந்திரா ஜெய்சிங்.

ஆனால் கோர்ட் நடைமுறைகள் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது மக்களுக்கான தகவலுரிமையாகும். முன்னதாக உச்ச நீதிமன்றம் தன் வெளிப்படைக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக விசாரணை நீதிமன்ற நடைமுறைகளின் சிசிடிவி பதிவுகளை ஆடியோவுடன் வெளியிட்டது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் இந்திரா ஜெய்சிங். நீதிகாக்கப்படுவது முக்கியம் என்பதோடு காக்கப்படும் நீதி பார்க்கப்படவும் வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x