Published : 30 Jun 2018 08:28 AM
Last Updated : 30 Jun 2018 08:28 AM

இரும்பு தொழிற்சாலை கோரி கடப்பா மாவட்டத்தில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலப் பிரிவினை மசோதாவில் அறிவித்தபடி, கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி தெலுங்கு தேசக் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சி.எம்.ரமேஷ் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை அமைக்கக் கோரி கடப்பா மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளும் வணிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

போராட்டம் காரணமாக கடப்பா மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x