Published : 29 Jun 2018 10:08 PM
Last Updated : 29 Jun 2018 10:08 PM

அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸில் இருந்து வரும் உணவுகள்

முகேஷ் அம்பானி, நீடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, ரஷல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு நாளை(30-ம்தேதி) நடக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு உணவுகள் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி, நீடா அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்தம் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி மும்பையில் ஆண்டலியாவில் உள்ள 27 மாடி சொகுசு இல்லத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடந்து வருகின்றன. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகவே பிரத்யேகமான முறையில் அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ட்ராகிராம் ஆகியவற்றில் இப்போதே வைரலாகிவிட்டது.

இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக நேற்று நடந்த மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாலிவுட்டின் நட்சத்திரங்களான ஷாருக்கான்-அவரது மனைவி , ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, கரண் ஜோகர், மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் ரகசியமான முறையிலும், ஊடகங்களுக்கு கசிந்துவிடாமலும் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு உணவுகள் அனைத்தும் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிரான்ஸில் உள்ள நம்பர் ஒன், உயர்தர பேக்கரி நிறுவனமான ‘லாட்ரீ’ பேக்கரியில் இருத்து வரவழைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இதை அம்பானி குடும்பத்தார் உறுதி செய்யவில்லை.

1862-ம் ஆண்டில் பாரிஸில் நிறுவப்பட்ட லாட்ரி பேக்கரி நிறுவன ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளிலும், சிங்கப்பூர், துபாய், நியூயார்க், லாஸ்ஏஞ்செல்ஸ் நகரங்களிலும் மிகவும் பிரபலமாகும்.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான உணவுகளை மும்பையைச் சேர்ந்த புட்லிங் பேங்கட்ஸ் அன்ட் கேட்டரிங் நிறுவனம் செய்து கொடுக்கிறது.இந்த நிறுவனம்தான் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து உணவுகள், கேக், இனிப்புகளை வரவழைக்கிறது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x