Last Updated : 29 Jun, 2018 05:36 PM

 

Published : 29 Jun 2018 05:36 PM
Last Updated : 29 Jun 2018 05:36 PM

மின்னலைப் பார்த்து நடுங்கிய மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகள்

மின்னலை நேருக்கு நேராகக் கண்ட பிறகு இளைஞரின் நடத்தையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி திருமணத்தை ஒரு பெண் பாதியில் நிறுத்திய சம்பவம் சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இதனால் இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேணுகுமாரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சோனேபூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட சிட்ரசென்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவருடைய திருமண நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்த வேளையில், திடீரென்று தனது திருமணத்தை அவர் பாதியில் நிறுத்தினார்.

இரண்டு நாட்களுக்கு முன் வயல்வெளியில் மின்னல் அடித்துள்ளது. அதைப் பார்த்த மணமகன் அதைக்கண்டு நடுங்கியுள்ளார். அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் எல்லாமே வித்தியாசமாக உள்ளதெனக் கூறி தன்னை மணம் முடிக்க இருந்த இளைஞரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள இயலாதெனக் கூறி ரேணு குமாரி நிராகரித்துள்ளார்.

திருமணச் சடங்குகள் பெரும் கொண்டாட்டத்தை நோக்கி ஏற்கெனவே கடந்துவிட்ட நிலையில் அவர் இவ்வாறு நிராகரித்தது அவரது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், ''மின்னலுக்குப் பிறகு அதைக்கண்டு நடுங்கியதால் அவரது (மணமகனின்) நடவடிக்கைகள் மாறிவிட்டன. இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருந்த மணமகள் அவரின் அசாதாரண நடத்தையை சுட்டிக்காட்டி தான் திருமணம் செய்துகொள்ளமுடியாது என எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்.

இதில் ஏற்பட்ட சலசலப்பில் மணமகனின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் மணமகள் வீட்டார் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் மணமகள் வீட்டார் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இம்மாநிலத்தில், உயரம் தொடர்பான பிரச்சனை, நிறம் தொடர்பான பிரச்சனை, மனநிலை தொடர்பான பிரச்சனை என்று பல திருமணங்கள் பாதியில் நின்றுள்ளன. ஆனால் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு பெண் திருமணத்தை மறுத்தது இதுவே முதன்முறையாகும்.'' இவ்வாறு போலீஸார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x