Last Updated : 29 Jun, 2018 04:44 PM

 

Published : 29 Jun 2018 04:44 PM
Last Updated : 29 Jun 2018 04:44 PM

குலாம் நபி ஆஸாத் மீது தேசத்துரோக வழக்கு: நாளை விசாரணை

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு எதிராக தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது.

இது குறித்து இன்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் இந்த அரசியல்வாதிக்கு எதிராக வழக்கு தொடந்திருக்கிறார். அதில் இவர் இந்திய தண்டனைச் சட்டம் 124 (தேசத்துரோகம்), 120பி (குற்ற சதித் திட்டம்) மற்றும் 505 (1) (ராணுவம்/கடற்படை/விமானப்படை உயரதிகாரிகள் பற்றி கலகத்தை உண்டாக்கும்வகையில் தவறான வதந்திகளைப் பரப்பியது) ஆகிய பிரிவுகளின்கீழ் இவர் குற்றங்களைப் புரிந்ததாக தெரிவித்துள்ளார். ராணுவத்தை சித்திரவதை செய்யும் கொலைகாரர்கள் போல இவர் வரைந்துகாட்டிய சித்திரம் நாட்டுக்கு எதிராக தொடுக்கப்படும் போரைவிட சற்றும் குறைந்ததல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நாளை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. வழக்கறிஞர் சசிபூஷண் அளித்த புகாரில், கடந்த ஜூன் 22 அன்று தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் தோன்றிய ஆஸாத், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை விட அதிகமான அளவில் பொதுமக்களைக் கொன்றனர்'' என்று தெரிவித்திருந்தார்.

இவ் வழக்கறிஞர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர், இந்திய தேசத்தின்மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பை கக்கிவருவதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x