Last Updated : 29 Jun, 2018 01:24 PM

 

Published : 29 Jun 2018 01:24 PM
Last Updated : 29 Jun 2018 01:24 PM

‘‘கைது செய்யுங்கள்’’ - முதல்வருடன் வாக்குவாதம் செய்த ஆசிரியருக்கு சிறை

இடமாறுதல் கோரி உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்திடம் வாக்குவாதம் செய்த பள்ளி ஆசிரியை உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை  கைது செய்யுமாறு கூட்டத்திலேயே முதல்வர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனில் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான ஜனதா தர்பார் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்தும் கலந்துகொண்டார்.

கூட்ட நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு பள்ளி ஆசிரியை, உத்தரா பகுகுணா குறுக்கிட்டு திடீரென்று முன்பகுதிக்கு வந்தார். போலீஸாரின் தடைகளை அற்புறப்படுத்தியவாறு வந்தவர், ''தொலைதூர இடத்திலிருந்து தன்னை மாறுதல் செய்ய வேண்டுமெனக்'' கோரினார். தன்னுடைய கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதைப்பற்றி ஆதங்கமாக முன்மொழிந்தபோது சத்தம்போட்டு மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் அவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறி ''உடனே அவரைக் கைது செய்யுங்கள்'' என மேடையில் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்த முதல்வர் ஆணையிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவும் வழங்குமாறு அவர் கூறினார்.

இக்காட்சி வீடியோவாக பதிவாகி சமூகவலைதளங்களில் பரவிவவருகிறது.

இதில், பள்ளி ஆசிரியை உத்தரா பகுகுணா, கடந்த 25 ஆண்டுகளாக தொலைதூர இடத்தில் பணியாற்றி வருவதாகவும் தனக்கு மாறுதல் வேண்டுமென கேட்கிறார்.

முதல்வர் அவரது வேண்டுகோளை நிராகரிக்கிறார், இதனால் ஆத்திரமடைந்த பகுகுணா முதல்வரிடம் விவாதம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ராவத் கோபத்தின் உச்சத்திற்கே சென்று, ''உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்யுங்கள். அப்பெண்ணை சிறையில் அடையுங்கள்'' என்று கத்தத் தொடங்குகிறார்.

நேற்று மாலை அப் பள்ளி ஆசிரியை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x