Last Updated : 29 Jun, 2018 12:32 PM

 

Published : 29 Jun 2018 12:32 PM
Last Updated : 29 Jun 2018 12:32 PM

பூரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசு தலைவருக்கு அவமரியாதை? - அர்ச்சகர்கள் மறுப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவியும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தபோது அவர்களுக்கு அவமரியாதை நேர்ந்ததாக கூறப்படும் புகாரை கோயில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர்.

பூரி ஜெகந்நாதர் ஆலய அர்ச்சகர் தாமோதர் மஹசூர் ஏஎன்ஐயிடம் பேசியபோது, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஆலய நிர்வாகி பிரதிப் ஜனா மற்றும் பூரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தங்களிடம் ராஷ்டிரபதி பவன் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

ராஷ்டிரபதி பவன் அளித்த புகாரில் பந்தாஸ் எனப்படும் ஆலய அர்ச்சகப் பணியாளர்கள் நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவியிடம் அவமரியாதையாக நடந்துகொள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை. அபாண்டமானவை.

இது தொடர்பாக ஸ்ரீஜெகந்நாத் கோவில் நிர்வாகி பிரதீப் ஜனா மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது நாங்கள் காவல்நிலையத்தில் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்.'' என்றார்.

சுவாமி தரிசனம் செய்ய மூலவர் சந்நதி அருகில் சென்றபோது குடியரசுத் தலைவரை வழியை மறித்ததோடு, நாட்டின் முதல் பெண்மணி சவீதாவையும் நெருக்கித் தள்ளியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த மார்ச் 19 அன்று ராஷ்டிரபதி பவன் பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆலயத்தில் அர்ச்சகர் பணியில் ஈடுபட்டுள்ள பந்தாஸ்களின் நடத்தை மிகவும் அதிருப்தி அளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x