Last Updated : 23 Jun, 2018 09:03 PM

 

Published : 23 Jun 2018 09:03 PM
Last Updated : 23 Jun 2018 09:03 PM

இத்தனையாண்டுகள் ஆட்சி செய்தவர்கள் மக்களையும் அவர்களின் கடின உழைப்பையும் நம்பவில்லை: பிரதமர் மோடி காங்கிரஸ் மீது சூசகத் தாக்கு

மத்தியப் பிரதேசத்தில் மோஹன்புரா பாசனத்திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி மீது சூசகமாகத் தாக்குதல் தொடுத்தார்.

“மக்கள் பாஜக அரசை நம்புகிறார்கள். மாறாகப் பொய்களையும், குழப்பத்தையும், அவநம்பிக்கையையும் பரப்புபவர்கள் அடிமட்ட எதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளார்கள்” என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி ஜனசங் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் போது, கல்வி, சுகாதாரம், நிதி, பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதே சியாமா பிரசாத் முகர்ஜியின் தொலைநோக்கு. இளைஞர்களுக்கு திறமையை வளர்ப்பது, அவர்களுக்கு வாய்ப்பளித்து இதன் மூலம் அவர்களை நாட்டுச் சேவைக்குத் தயார்படுத்துவது. ஸ்டார்ட் அப், மேக் இன் இந்தியா ஆகியவை சியாமா முகர்ஜி சிந்தனையின் பிரதிபலிப்பே.

இந்நிலையில் ஒரு குடும்பத்தினை தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் மற்ற உயர்ந்த ஆளுமைகளின் பங்களிப்பை சிறுமைப் படுத்துவதும் துரதிர்ஷ்டகரமானவை.

இத்தனையாண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் நாட்டின் பலம் என்பதை நம்பவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக நாம் விரக்தியாகப் பேசவில்லை. நாங்கள்தான் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம்.

கடந்த 4 ஆண்டுகளாக மத்தியிலும், 13 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்திலும் பாஜக ஏழைகள், விவசாயிகள், நலிவுற்றோருக்காகப் பாடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் மத்தியப்பிரதேசத்தை ஆண்ட போது நோய்க்கூறு மாநிலங்கள் என்ற அர்த்தம் தொனிக்கும் பிஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ,உ.பி ஆகியவற்றை பிமாரு மாநிலங்கள் என்று வர்ணித்தது. காங்கிரஸ் இப்படிக் கூறியதை மக்களை அவமானப்படுத்துவதாகக் கருதவில்லை. பாஜக இந்த அடையாளத்தை அகற்ற பாடுபட்டது.

இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x