Published : 23 Jun 2018 12:24 PM
Last Updated : 23 Jun 2018 12:24 PM

‘சுத்தமான தண்ணீராக மாறும் சிறுநீர்’- ஹைதராபாத் மெட்ரோ புதிய திட்டம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில், சிறுநீரை சுத்தமான தண்ணீராக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சுத்தமான நீராக மாற்றப்படும் நீர் தோட்டங்கள், செடிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மியாபூர், கேபிஎச்பி, குட்டபள்ளி, ரசூல்புரா மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த திட்டம் முதல்கட்டமாகத் தொடங்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே இடத்தில் சிறிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கழிவறையைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்கும்போது, அதில் சேமிக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீரில் இருந்து நைட்டரஜன், அமோனியா சத்துக்கள் தனியாக பிரிக்கப்பட்டு அவை உரமாகச் செடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுத்தமான, துர்நாற்றமில்லாத நீர் செடிகளுக்கும், மரங்களுக்கும் பாய்ச்சப்படுகிறது.

தண்ணீர் வீணாவைத்தடுக்கும் வகையில், ஹைதராபாத் மெட்ரோ ரெயில் லிமிட்(எச்எம்ஆர்எல்) நிறுவனம், நேச்சுரோசேனி என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, சிறுநீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நீர் துர்நாற்றமில்லா, கழிவறையும் எந்தவிதமான துர்நாற்றமில்லாமல், சுத்தமாகவே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒவ்வொரு கழிப்பறையும் ரூ.3லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.வி.எஸ்.ரெட்டி கூறுகையில் ‘‘எச்என்ஆர்எல் மற்றும் நேச்சுரோசேனி இணைந்து உருவாக்கியுள்ள இந்த பயோ-கழிப்பறையில் ஒரேநேரத்தில் 3 ஆண்கள் சிறுநீர் கழிக்க முடியும். இந்தச் சிறுநீர் அனைத்தும் பயோ கழிப்பறையாகும்.

இந்த கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசாது. சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, கறைபடியாது. பயோபில்டர், கார்பன் பில்டர் பொருத்தப்பட்டு இந்தக் கழிப்பறை அமைக்கப்பட்டு சிறுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

சிறுநீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மைக்ரோப்கள், நைட்ரஜன் மற்றும் அமோனியாவாக பிரிக்கப்பட்டு செடிகளுக்கு உரமாக்கப்படுகிறது. சுத்தமான, எந்தவிதமான துர்நாற்றமில்லாமல் பிரிக்கப்படும் நீர் சேமிக்கப்பட்டு நகரில் உள்ள செடிகளுக்கும், மரங்களுக்கும் பாய்ச்சப்படுகிறது. இந்த நீரில் எந்தவிதமான துர்நாற்றமும், எந்தவிதமான கிருமிதாக்கும், தொற்றும் இல்லாததால், தாராளமாக வழக்கமான நீரைப் போல் பயன்படுத்தலாம்.

இப்போது ஒவ்வொரு கழிப்பறையும் 3 பேர் மட்டுமே சிறுநீர் கழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 300 கிலோலிட்ட நீர் சுத்திகரிப்பு செய்து பிரிக்கப்பட்டு வருகிறது. விரைவில்இந்த கழிப்பறைகள் 8 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x