Last Updated : 22 Jun, 2018 08:04 PM

 

Published : 22 Jun 2018 08:04 PM
Last Updated : 22 Jun 2018 08:04 PM

காஷ்மீரிகளுக்கு சுதந்திரம்தான் முதல் குறிக்கோள்: சைஃபுதின் சோஸ் கூற்றை புத்தகம் விற்பதற்கான மலிவான தந்திரம் என காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சைஃபுதின் சோஸ் தனது புதிய புத்தகத்தில் காஷிமீரிகளின் முதன்மை விருப்பத்தெரிவு சுதந்திரமே என்றும் தனது இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் துணைக்கு அழைத்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது புத்தகத்தில், “காஷ்மீரிகளுக்கு தங்கல் சுதந்திர விருப்புறுதியைத் தெரிவிக்க வாய்ப்பளித்தால் அவர்கள் சுதந்திரத்தையே தெரிவு செய்வார்கள் என்று பர்வேஸ் முஷாரப் விளக்கினார். முஷாரப்பின் இந்தக் கருத்தும், கணிப்பும் இன்று கூட சரியானதே” என்று எழுதியுள்ளார் சோஸ்.

காங்கிரஸ் மறுப்பு மற்றும் கண்டனம்:

காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, “ஜம்மு காஷ்மீர் இந்திய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியே. இதுதான் மாறாத மாற்றப்பட முடியாத உண்மை. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் கடமை உணர்வு மிகுந்த எந்த ஒரு இந்தியனும் புத்தகம் விற்பதற்காகக் கூறப்பட்ட அந்த மலிவான தந்திரத்தை வெறுத்து ஒதுக்கவே செய்வார்கள். இந்தப் புத்தகம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இப்போதும் எப்போதும் அப்படித்தான் இந்த உண்மையை யாருக்கும் மறுத்துப் பேச உரிமையில்லை” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “பலரும் புத்தகம் விற்கவோ, மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்ளவோ இப்படிப் பேசி வருகிறார்கள்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, குலாம் நபி ஆசாத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி உயிர்கள் பலியாகக் கூடாது என்று கூறியது சாமானிய மக்களுக்கு ஆதரவாகத்தான் இதனை தேச விரோதம் என்று பார்க்கக் கூடாது என்றார்.

சரி, சோஸுக்கு எதிரான நடவடிக்கை என்ன என்று கேட்ட போது, “ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி இது குறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ளும்.

பிரதமர் மீது தாக்கு

பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரிக்க பிரதமர் ஐஎஸ்ஐ-யை அழைத்தார், பாஜக தலைவர் அமித் ஷா ஐஎஸ்ஐ மீது நம்பிக்கை தெரிவித்தார் என்று கூறிய சுர்ஜேவாலா, முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சயீத் மோடியின் முன்னிலையில் பதவியேற்பு விழாவில் பிரிவினைவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் நன்றி தெரிவித்தார். பாதுகாப்புப் படையினருக்கோ, தேர்தல் ஆணையத்தையோ நன்றியுடன் பார்க்கவில்லை.

மேலும் ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’வுக்காக அசியா அந்த்ராபி என்ற பெண்ணை பாஜக-பிடிபி அரசு எப்படி பேனரில் இடம்பெறச் செய்தனர் என்பதைப் பார்த்தோம் ஆனால் அவரோ பாகிஸ்தானுக்குச் சென்று தீவிரவாதிகளுடன் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டவராக இருந்தார். எனவே ஆங்காங்கே சிலர் கூறும் கவன ஈர்ப்புக் கூற்றுகளை வைத்துக் கொண்டு திட்டத்தை திசைத் திருப்ப வேண்டாம், அத்தகைய கவன ஈர்ப்பு கருத்துகளை காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக ஏற்கவில்லை மறுக்கிறது, என்றார் சுர்ஜேவாலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x