Last Updated : 22 Jun, 2018 06:46 PM

 

Published : 22 Jun 2018 06:46 PM
Last Updated : 22 Jun 2018 06:46 PM

தமிழக எழுத்தாளர்கள் கிருங்கை சேதுபதி, சுனீல் கிருஷ்ணனுக்குப் பால, யுவபுரஷ்கார் விருது

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு யுவபுரஸ்கார் விருதும், கிருங்கை சேதுபதி உள்பட 21 எழுத்தாளர்களுக்குப் பால் சாகித்ய புரஸ்கார் விருதையும் டெல்லி சாகித்ய அகாடெமி இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மாநில, தேசிய அளவிலான எழுத்தாளர்களுக்கு விருதுகளை வங்கி சாகித்ய அகாடெமி கவுரவிக்கிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதும், யுவபுரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பால் புரஸ்கார் விருதுகள் வரும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.ஆனால், யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கப்படும் தேதிகள் குறிப்பிடவில்லை.

இதில் யுவ புரஸ்கார் விருதுக்கு கவிதைப் பிரிவில் 10 எழுத்தாளர்கள், சிறுகதைப் பிரிவில் 7 எழுத்தாளர்கள், நாவல் பிரிவில் 3 எழுத்தாளர்ரகள், நாடக எழுத்தாளர் ஒருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நினைவுப்பரிசும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள் 21 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால் சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈஸ்டரின் கியர்(ஆங்கிலம்), திவேக் ரமேஷ்(இந்தி), பி.கே. கோபி(மலையாளம்), காஞ்யானி சரணப்பா சிவசங்கப்பா(கன்னடம்), நரம்சேத்தி உமாமகேஷ்வர் ராவ்(தெலுங்கு),ரியாஸ் சித்திக்(உருது) உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவ புரஸ்கார் விருதுகளில் 21 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அம்பு படுக்கை என்ற சிறுகதையை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பால சுதாகர் மவுலி(தெலுங்கு), பத்மநாபா பாட்(கன்னடம்), ஷான்நாஸ் ரஹ்மான்(உருது), நாவல் பிரிவில் அமல்(மலையாளம்) உள்ளிட்ட 21 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x