Published : 22 Jun 2018 07:45 AM
Last Updated : 22 Jun 2018 07:45 AM

புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமனம்: மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை

மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் இந்திய கலாச்சாரத்தை மதிப்பவராக இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீண்டும் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அரவிந்த் சுப்பிரமணியத்துக்கு நமது நாட்டை பற்றி சரியான புரிதல் இல்லை. விவசாயிகளை அவர் புறக்கணித்தார். எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை பொருளாதார ஆலோசகர் இந்திய கலாச்சாரத்தை மதிப்பவராக இருக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்களின் நலன்களில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரையே தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x