Published : 22 Jun 2018 07:46 AM
Last Updated : 22 Jun 2018 07:46 AM

அறுவை சிகிச்சை அரங்கில் உதவியாளராக திருநங்கை: கொல்கத்தா மருத்துவமனையில் நியமனம்

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் அறுவைசிகிச்சை அரங்கின் தொழில்நுட்ப உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஜியா தாஸ். இவர் அங்குள்ள விடுதிகளில் நடனமாடிக் கொண்டிருந்தார். பின்னர், அங்கிருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காக நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் அடைக்கலமானார்.

இந்த தொண்டு நிறுவன செயலாளர் பபாத்தியா முகர்ஜி என்பவர் கூறுகையில், ‘‘சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் திருநங்கைகளுக்கு வாழ்வாதாரம் அவசியம். இதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர்களின் வேலைவாய்ப்புக்களுக்காக ஒரு முகாம் நடத்தினோம். அப்போது சுகாதாரத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இரண்டு திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை அரங்கின் தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சி அளிப்பதாக கூறினார். அதன்படி, ஜியா தாசுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த வேலையில் திருநங்கை ஒருவர் சேருவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x