Last Updated : 02 Jun, 2018 11:25 AM

 

Published : 02 Jun 2018 11:25 AM
Last Updated : 02 Jun 2018 11:25 AM

வீட்டிலுள்ள பெண்களை விற்று கடனை செலுத்துங்கள் - சமூகவலைதளங்களில் வைரலாகும் வங்கி ஊழியரின் அத்துமீறல் பேச்சு

மகாராஷ்டிராவில், கடனை திருப்பிச்செலுத்த தாமதமான வாடிக்கையாளரிடம் மிக மோசமாக பேசி நடந்துகொண்டதாக தனியார் வங்கி ஊழியர் ஒருவர் மீது கோலாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மகாராஷ்டிராவில் உள்ள ஆர்பிஎல் வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்ற ஒருவர், அக்கடனை திருப்பிச் செலுத்த சற்று தாமதமாகியுள்ளது. அப் பணத்தை சரியாக அந்த செலுத்தாத வாடிக்கையாளரிடம் தொலைபேசியில் பேசும்போது ஆர்பிஎல் வங்கியின் மும்பை ஊழியர் தவறான மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.

''பெரிய அளவில் வாங்கிய கடன்தொகையை செலுத்த முடியவில்லை யென்றால், தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை விற்க வேண்டும். விற்று அப்பணத்தைச் செலுத்தலாம். அவரது பெயர் வெளியிடப்படமாட்டாது'' என்று பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு வாடிக்கையாளரிடம் மிகத் தவறாக பேசியதால் வங்கி ஊழியர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை

உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகள் இவ்வுரையாடலின் ஒலி வடிவத்தை வெளியிட்டதே போலீஸார் வழக்கு பதிவு செய்ய வழிவகுத்தது.

வாங்கிய கடனுக்காக தவணையை கட்டத் தவறிய வாடிக்கையாளரிடம் பணத்தை வசூல் செய்தாக வேண்டிய வங்கியின் பொறுப்பு எனினும் நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் செயல்பட்ட வங்கி ஊழியருக்கு ''எந்த எல்லை அளவு பேச வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியாதா?'' என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு அவர்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தொலைபேசியில் பயன்படுத்தப்பட்ட மொழியை ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படி பேசியது கண்டிக்கத்தது.

எங்கள் சார்பாக அத்தகைய மொழியைப் பயன்படுத்துவதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

''வாடிக்கையாளர் தவறிழைத்தவர், மற்றும் வழக்கமான வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வங்கி தனது கடன் தொகையை வசூலிக்கும் முயற்சிகள் தொடரும்'' என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x