Last Updated : 01 Jun, 2018 12:57 PM

 

Published : 01 Jun 2018 12:57 PM
Last Updated : 01 Jun 2018 12:57 PM

சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான கிளாட் தேர்வு முடிவுகள் வெளியானது: முதல் மூன்று இடங்களைப் பிடித்த 3 நண்பர்கள்

இன்று வெளியாகியுள்ள அனைத்து இந்திய பொது சட்ட நுழைவுத் தேர்வு (கிளாட்) முடிவுகளில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இத்தேர்வில் அமன் கார்க், 159 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் தேவான்ஷ் கவுசிக் மற்றும் அன்மோல் குப்தா இருவரும் 157.5 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.இவர்கள் மூவருமே இத்தேர்வு எழுதுவதற்காக ஒரே இன்ஸ்டியூட்டில் படித்தவர்கள்.

இதுகுறித்து தேவன்ஷ் கவுசிக் பிடிஐயிடம் தெரிவிக்கையில்,

நாங்கள் மூவரும் ஒரே பயிற்சிக்க் கல்லூரியில் படித்தோம். நாங்கள் மூவரும் பயிற்சிக் குறிப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டதோடு ஒன்றாகவே இணைந்து படித்தோம். எப்படியும் பெங்களூருவில் உள்ள நேஷ்னல் இஸ்கூல் ஆப் லா யுனிவர்சிடியில் சேரவேண்டும் என்ற லட்சியம் எங்கள் மூவருக்குமே இருந்தது. இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் பெற்றோர் மற்றும் எங்களுக்குப் பயிற்சியளித்த ஆசியர்கள் ஆவர் என்றார்.

நாடு முழுவதும் 19 மதிப்புமிக்க தேசிய சட்டக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அறிவிப்பு வந்தபின், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மே மாதம் 13ந்தேதி நடைபெற்ற கிளாட் தேர்வில் நிறைய குறைபாடுகள் இருப்பதாக் கூறி மனுதாரர்கள் தேர்வு முடிவை நிறுத்திவைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதில் அவர்கள் கூறியிருந்த முக்கிய காரணம் இத்தேர்வினால் நேர இழப்பு அதிக அளவில் ஏற்படுவதால் அது அடிப்படை சமத்துவ உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என்று அவர்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.54 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் கிளாட் 2018 தேர்வு எழுதியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x