Published : 04 May 2018 07:45 AM
Last Updated : 04 May 2018 07:45 AM

அகமதாபாத் இஸ்ரோ ஆய்வு மையத்தில் தீ

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நேற்று கடும் தீவிபத்து ஏற்பட்டது.

அகமதாபாத்தில் உள்ள பரந்த இஸ்ரோ வளாகத்தில் ‘ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர்’ (எஸ்ஏசி) என்ற உள் வளாகம் உள்ளது. இங்குள்ள ஆன்டெனா ஆய்வுக்கூடத்தில் நேற்று பிற்பகல் கடும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சில சாதனங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து 25 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பிற கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

ஏஸ்ஏசி-யில் வழக்கமாக 30-40 விஞ்ஞானிகள் பணியாற்றுவர். இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிஐஎஸ்எப் காவலர் ஒருவர் மட்டுமே காயம் அடைந்தார். மின்கசிவே தீவிபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x