Published : 09 Apr 2018 04:19 PM
Last Updated : 09 Apr 2018 04:19 PM

கரம் பிடித்த இளம் ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்வில் தொடங்கிய காதல் திருமணத்தில் முடிந்தது

 

ஐஏஎஸ் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த பெண் டினா டாபி, இதே தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷபி கானை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற டினா டபி (வயது 25) தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் அப்போது தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்று ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்து பெரிய அளவில் பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியானது.

மசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஐஏஎஸ் அகாடமியில் டினா படித்தபோது, அவருடன் சேரந்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஆமீர் உல் ஷைப் கான் (வயது 26) என்பவரும் படித்தார். இருவரும் சேர்ந்தே ஐஏஎஸ் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொண்டனர்.

அப்போது அவர்களுக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. டினா தேசிய அளவில் முதலிடம் பிடித்தபோது, காஷ்மீர் மாநில அளவில் ஷபி கான் இரண்டாவது இடம் பிடித்தார்.

இருவருமே ராஜஸ்தான் மாநிலத்தில் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தனர். இவர்களுடைய காதல் பற்றி ஊடகங்களி்லும் செய்திகள் வந்தன. இந்நிலையில் டினா டாபியும், ஆமீர் உல் ஷபி கானும் திருமணம் செய்து கொண்டனர்.

தெற்கு காஷ்மீரில் பஹல்கமில் இத்திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x