Last Updated : 06 Apr, 2018 07:07 PM

 

Published : 06 Apr 2018 07:07 PM
Last Updated : 06 Apr 2018 07:07 PM

ரயில்களில் இனி தண்ணீர் முதல் தயிர் சாதம் வரை 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

ரயில் நிலையங்களிலும், ரயில்களில் விற்பனை செய்யப்படும், உணவுகள், குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே வரிவிதிப்பு முறையாக ஜிஎஸ்டி வரியைக் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடைமுறைப்படுத்தியது.

இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா என்ற சந்தேகம் ரயில்வே துறைக்கு இருந்து வந்தது. அதைத் தெளிவுபடுத்தி மத்திய அரசு கடந்த 31-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் ரயில்வே, ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள், குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவற்றுக்கு இனி 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி இனி விதிக்கப்படும். இதில் எந்தவிதமான சந்தேகமும், நிலையற்ற தன்மையும் தேவையில்லை.

ரயில் நிலையங்கள், நடைமேடைகள், ரயில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகள், குடிநீர், பானங்கள், குளிர்பானங்கள் அனைத்தும் சரிசமமாக 5 சதவீதம் வரி இனி விதிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x