Last Updated : 06 Apr, 2018 11:34 AM

 

Published : 06 Apr 2018 11:34 AM
Last Updated : 06 Apr 2018 11:34 AM

‘‘அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை’’ -லாலு பிரசாத் காட்டம்

மத்திய பாஜக அரசு, பலவீனமான பிரிவு மக்களை மோசமாக நடத்திவருவதாகவும், நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நீடிப்பதாகவும் ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். .

பிஹார் முன்னாள்  முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உடல்நிலை குன்றிய நிலையில் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்.

ராஞ்சியின் ராஜேந்திரா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் பரிந்துரையின் பேரில் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிறப்புச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் பாட்னாவில்  நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் லாலு பிரசாத்தின் உரை  வாசிக்கப்பட்டது.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘சதாயத்தின் பலவீனமான பிரிவுகளை ராஷ்ட்டிரிய ஜனதா தளம் நம்பிக்கையோடு பார்க்கிறது. சமுதாயத்தில் கீழுள்ள பிரிவுகள் மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகளும்கூட இனவாத மனுவாத சக்திகளை எதிர்த்துப் போராடும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின்மீது நம்பிக்கையை வைத்துள்ளன.

சமுதாயத்தில் பலவீனமான பிரிவுகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் நீக்கப்பட்டன அல்லது மாற்றப்படுகின்றன. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு நிலையான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு சமுதாயத்தை பிரிக்கும் சக்திகளை ஊக்குவித்து அவற்றை கூர்மைப்படுத்துவதன் மூலம் தேர்தல்களில் வெற்றிபெற்று வருகிறது.

நாட்டில் தற்போது நிலவிவரும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை  நிலவி வருகிறது. இது முன்பு அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலையை விட ஆபத்தானது, ஏனெனில் இன்று அரசியலமைப்பை மாற்றுவது பற்றி பேசுகிறார்கள்.

ராஷ்ட்டிரிய ஜனதா தள உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் 14 அன்று  அம்பேதகாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ள மக்களை அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்’’

இவ்வாறு தனது உரையில் ராஷ்ட்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்டிரிய ஜன்தா தளத்தின் கட்சிக் கூட்டம் பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் துணைத் தலைவர் ராப்ரி தேவி தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x